நெய்வேலி நீச்சல் குளத்தில் குளித்த மாணவர்களுக்கு கண்பார்வை பாதிப்பு
நெய்வேலி:
நெய்வேலியில் நிலக்கரி சுரங்க நிர்வாகத்துக்குச் சொந்தமான நீச்சல் குளத்தில் குளித்த மாணவர்களுக்குகண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. அதில் ரசாயனம் கலந்தது தான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
நெய்வேலியில் உள்ள இந்த 2 நீச்சல் குளங்களில் தேசிய விளையாட்டுப் போட்டியை நடத்தவும் வசதி உள்ளது.மிக நவீன நீச்சல் குளங்களான இதில் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன் இங்கு நீச்சல் பயிற்சியில் ஈடுபட்ட சுமார் 60 மாணவர்களுக்கு தோல் அரிப்புஏற்பட்டது. தோலின் நிறமும் மாறியது. பின்னர் கணகளுக்கு அருகே கட்டிகள் உருவாகி ரத்தக் கசிவும்உண்டானது.
தொடர்ந்து சில மாணவர்களுக்கு கண் பார்வையும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து இந்த மாணவர்களை மதுரைஅரவிந்த் மருத்துவமனையிலும், சென்னை கண் மருத்துவமனைகளிலும் அவர்களின் பெற்றோர்கள்சேர்த்துள்ளனர்.
இந்த நீச்சல் குளத்தின் நீரில் விஷத்தன்மை கொண்ட ரசாயனம் கலந்தது தான் இந்த பாதிப்புக்குக் காரணம் என்றுகூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிலக்கரி சுரங்க நிர்வாகம் நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்என்று கோரிக்கையும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications