தூத்துக்குடி நகராட்சியில் பயங்கர மோதல்: அதிமுக கவுன்சிலர் மூக்கு உடைப்பு
தூத்துக்குடி:
தூத்துக்குடி நகராட்சிக் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலரைத் தாக்கி அவருடைய மூக்கை உடைத்த 2 திமுககவுன்சிலர்கள் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி நகராட்சிக் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. அப்போது சென்னை மாநகர மேயர்ஸ்டாலினின் பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்து திமுக கவுன்சிலர்கள் அனைவரும் கறுப்பு பேட்ஜ் அணிந்துவந்திருந்தனர்.
ஸ்டாலினின் பதவிப் பறிப்பை எதிர்த்து அவர்கள் ஒரு கண்டனத் தீர்மானத்தை வாசிக்கத் தொடங்கினர்.
ஆனால் திமுக கவுன்சிலர்கள் இந்தக் கண்டனத் தீர்மானத்தை வாசித்துக் கொண்டிருந்த போதே அதை எதிர்த்துஅதிமுக கவுன்சிலரான செல்லப்பா கத்திக் கொண்டே அவர்களை நோக்கிப் பாய்ந்து வந்தார்.
இதற்குள் அதிமுக கவுன்சிலர்கள் சிலர் நகராட்சித் தலைவர் டேனியல் ராஜை முற்றுகையிட்டு கூச்சல் போட்டனர்.
இதைப் பார்த்த திமுக கவுன்சிலர்களும் எழுந்து முன்னேறத் தொடங்கினர். இதையடுத்து இரு தரப்பினருக்கும்இடையே பயங்கர மோதல் வெடித்தது.
இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் பயங்கரமாகத் தாக்கிக் கொண்டனர். அப்போது திமுக கவுன்சிலர்களானபெரியசாமி மற்றும் பிரான்சிஸ் ஆகியோர் செல்லப்பாவைச் சூழ்ந்து நின்று கொண்டு அவருடைய முகத்தில்சராமாரியாகக் குத்தினர்.
இந்தப் பயங்கரத் தாக்குதலால் நிலைகுலைந்த செல்லப்பா அப்படியே கீழே விழுந்தார். அவருடைய மூக்குஉடைந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது.
அவர் கீழே விழுந்தும் விடாமல் திமுக கவுன்சிலர்கள் அவருடைய சட்டையையும் வேட்டியையும் உருவிக் கிழித்துஎறிந்தனர். கொட்டும் ரத்தத்துடன் செல்லப்பா உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
பின்னர் ஸ்டாலின் பதவிப் பறிப்பைக் கண்டித்து திமுக கவுன்சிலர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் செல்லப்பாவின் மூக்கை உடைத்த பெரியசாமியையும் பிரான்சிஸையும் போலீசார் கைது செய்தனர்.
ஸ்டாலின் பதவிப் பறிப்பைக் கண்டித்து கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் உள்ள பல நகராட்சிகளிலும்திமுக-அதிமுக உறுப்பினர்களிடையே பயங்கரமான மோதல் ஏற்பட்டது.
இந்த மோதல்களில் பெரும்பாலும் திமுக உறுப்பினர்களுக்குத் தான் அடி விழுந்து கொண்டிருந்தது. ஆனால்இப்போது மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள அதிமுகவைச் சேர்ந்த கவுன்சிலருக்கு பயங்கர அடி விழுந்ததோடுமூக்கும் உடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-->
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications