ராஜ்குமார் கடத்தலில் கருணாநிதி, ரஜினியை சேர்க்க அரசு முயற்சி: கோபால் தகவல்
சென்னை:
நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் கருணாநிதியையும், ரஜினிகாந்தையும் சேர்க்கும் முயற்சியில் தமிழக அரசுஈடுபட்டுள்ளதால நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கோபால் கூறியுள்ளார்.
உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த 10 நாட்களாக அவர் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்குஉட்பட்டார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப் பாளையத்தில் உள்ள காவல் நிலையத்தில் வைத்து அவர் விசாரிக்கப்பட்டார்.இந்த விசாரணை நேற்றுடன் முடிவடைந்தது. இன்று சென்னை திரும்பிய அவர் பத்திரிக்கையாளர்ளைச் சந்தித்தார்.அவர் கூறுகையில்,
கடந்த 10 நாட்களாக விசாரணை என்ற பெயரில் போலீசார் என்னை துன்புறுத்தினர். மனரீதியிலும், உடல்ரீதியிலும்எனக்கு உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் அவர்கள் நடந்து கொண்டனர்.
சித்தரவதை செய்துவிட்டனர். கிட்டத்தட்ட 1000 கேள்விகள் வரை அவர்கள் கேட்டார்கள்.
நக்கீரன் பத்திரிக்கையை இயங்க விடாமல் முடக்குவது தான் அவர்களது கேள்விகளின் நோக்கமாக இருந்தது.
நடிகர் ராஜ்குமார் வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியையும் நடிகர் ரஜினிகாந்தையும் தொடர்புபடுத்தவும்முயற்சி நடப்பதை போலீசாரின் பேச்சிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.
ரஜினி உன்னிடம் என்ன சொன்னார்? காட்டுக்கு அவர் உன்னை போகச் சொன்னாரா? அவருக்கு இதில் ஏன்ஆர்வம் இருந்தது? கருணாநிதி, ரஜினிக்கு இதில் என்ன தொடர்பு? உங்களுக்கும் ரஜினிக்கும் என்ன தொடர்பு, வீரப்பனைசந்திக்க விரும்புவதாக ரஜினி கூறினாரா என்று பல கேள்விகளைக் கேட்டனர். அதற்கு நான், பல தரப்பினரும் காட்டுக்குச் சென்றுராஜ்குமாரை மீட்குமாறு என்னைக் கேட்டுக் கொண்டனர். அதுபோலவே ரஜினியும் கேட்டுக் கொண்டார் என்றேன்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தும் பல கேள்விகளை போலீஸார் கேட்டனர். அவரையும் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கும்எண்ணம் போலீஸாரிடம் இருப்பதாகவேத் தோன்றுகிறது என்றார் கோபால்.
நக்கீரன் பத்திரிக்கையில் வேலை பார்ப்பவர்கள் விவரம், எனது சொத்துக்கள், எனது வங்கிக் கணக்குகள் உள்பட43 வகையான ஆவணங்களை இன்னும் 10 நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டும் என்று போலீசார் எனக்கு கெடுவிதித்துள்ளனர் என்றார் கோபால்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications