கேரள ரயில்வே ஆன தென்னக ரயில்வே
சென்னை:
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வந்துசேர்ந்தது.
இந்த மாதம் 1ம் தேதி முதல் 11ம் தேதி வரை தென்னக ரயில்வே 12 புதிய ரயில்களை அறிமுகப்படுத்துகிறது.இதில் 4 ரயில்கள் கேரளாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் ஓ.ராஜகோபால்கேரளத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நமது மாநிலத்தின் சார்பிலும் பல அமைச்சர்கள் மத்தியில் இடம் பெற்றுள்ளனர். இதனால், அவர்களுக்கு லாபம்ஏற்பட்டதே தவிர, தமிழகத்துக்கு பெரிய அளவில் ஏதாவது லாபம் ஏற்பட்டதா என்பது விவாதத்துக்குரிய விஷயம்தான்.
ஆனந்தபுரி எக்ஸ்பிரஸ்:
சென்னை செல்லும் ஆனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலை நேற்று மாலை திருவனந்தபுரத்தில் இருந்து ஓ.ராஜகோபால்இயக்கி வைத்தார். இந்த ரயில் இன்று காலை சென்னை வந்து சேர்ந்தது.
இந்த ரயில் வாரம் 6 நாட்கள் இயக்கப்படும். திங்கள்கிழமை தவிர பிற நாட்களில் மாலை 4 மணிக்குதிருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு 5.40 மணிக்கு நாகர்கோவில் வரும். மறுநாள் காலை 8.20 மணிக்குசென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்து சேரும்.
அதே போல ஞாயிற்றுக்கிழமை தவிர பிற நாட்களில் தினமும் இந்த ரயில் இரவு 7.30 மணிக்கு சென்னையில்எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் 12.20 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.
இந் நிலையில் இன்று நடக்கவுள்ள அமைச்சரவை மாற்றத்தில் ஓ.ராஜகோபாலின் பதவி மாற்றப்படும் என்றுதெரிகிறது. அவர் வேறு துறைக்கு நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications