ஸ்டாலின் பதவி பறிப்பு: விரைந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஸ்டாலின் பதவிப் பறிப்பு தொடர்பான வழக்கை விரைவாக விசாரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட சிறப்பு கவனஈர்ப்பு மனுவை சுப்ரீம் கோர்ட் நிராகரித்துவிட்டது.

இந்த வழக்கை கோடை விடுமுறைக்குப் பின்னரே விசாரித்து தீர்ப்பு வழங்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

ஒருவருக்கு ஒரு பதவி சட்டத்தின் மூலம் ஸ்டாலினிடம் இருந்த சென்னை மேயர் பதவி பறிக்கப்பட்டது. இதைஎதிர்த்து உதயகுமார் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் மேயர் பதவி பறிப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கநீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால் அவரது பதவியை தமிழக அரசு பறித்தது.

அதே நேரத்தில் இந்த வழக்கு விசாரணை முழுமையாக விசாரித்து தீர்ப்பு தரப்படும் வரை மேயர் பதவிக்கு தேர்தல்நடத்தவும் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து புதிய மேயரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்த முடியாத நிலையில்தமிழக அரசு உள்ளது.

இதைத் தொடர்ந்து துணை மேயர் கராத்தே தியாகராஜனை மேயர் பொறுப்பில் அமர வைத்துள்ளது.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந் நிலையில் தனது இடைக்கால உத்தரவில் உயர்நீதிமன்றம் முழுமையான நியாயம் வழங்கவில்லை என்று கூறி உதயகுமார் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்புமேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.

அதில், ஸ்டாலினைக் குறி வைத்துத் தான் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தை முன்தேதியிட்டுஅமல்படுத்தியது தமிழக அரசு. இதன் மூலம் தமிழக அரசின் கெட்ட நோக்கம் வெளிப்பட்டுவிட்டது.

இந்த வழக்கில் தனது இடைக்காலத் தீர்ப்பில் சென்னை உயர் நீதிமன்றம் உரிய நியாயம் வழங்கவில்லை.

எனவே, இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விரைவாக விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரூபா பால், அசோக் பான் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், இந்த வழக்கைமுன்னதாக விசாரிக்க தேதியை நிர்ணயிக்க முடியாது என்று கூறி அதனை நிராகரித்து விட்டனர். கோடை விடுறைக்குப்பின்னரே இந்த வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட்டு இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துவிட்டனர்.

மேயர் பதவியை காலியாக வைக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட அந்தப் பதவியில் துணைமேயர் கராத்தே தியாகராஜனை நியமித்ததை எதிர்த்து இன்னொரு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுவதும் கண்டனக் கூட்டம்:

இந் நிலையில் ஸ்டாலின் பதவிப் பறிப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது.

நேற்று திருவண்ணாமலையில் நடந்த கூட்டத்தில் ஸ்டாலின் பேசினார். திருச்சியில் 4ம் தேதி நடக்கும் கண்டனக்கூட்டத்தில் கருணாநிதி கலந்து கொள்கிறார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+