தமிழக பா.ஜ.க. தலைவர் விரைவில் மாற்றம்?
சென்னை:
அகில இந்திய பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் பதவியில் மாற்றம் செய்ததைப் போலவே தமிழக பா.ஜ.க. தலைவர்கிருபாநிதியையும் மாற்ற அகில இந்திய பா.ஜ.க. தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அகில இந்திய பா.ஜ.க. தலைவராக இருந்து வந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி அப்பதவியிலிருந்து அகற்றப்பட்டுவிட்டார். அவர் தற்போது மத்திய சட்டத்துறை அமைச்சராகியுள்ளார்.
இதேபோலவே தமிழக பா.ஜ.க. தலைவரையும் மாற்ற வேண்டும் என சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக பா.ஜ.க. தலைவராக கிருபாநிதி உள்ளார். தமிழக பா.ஜ.க.வின் முதல் தலித் தலைவர் என்ற பெயர் இவருக்குஉள்ளது. கிருபாநதியின் சமீப காலப் போக்கினால் பா.ஜ.கவில் ஒரு தரப்பினர் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.குறிப்பாக பொதுச் செயலாளர் இல. கணேசன் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
திமுகவுக்கு விரோதமான போக்கை கிருபாநிதி கடைப்பிடித்து வருகிறார். தனது மனதுக்கேற்றபடி செயல்படுகிறார்.கட்சியின் அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்து செல்வதில்லை. கஷ்டப்பட்டு சேர்த்த கட்சித் தொண்டர்களைஇவரது நடவடிக்கையால் இழந்து விட நேரிடலாம் என்ற எண்ணம் கட்சிக்குள் உள்ளது.
எனவே ஜனாவை மாற்றிய கையோடு, கிருபாநிதியையும் மாற்ற வேண்டும் என்று இந்த எதிர்ப்பாளர்கள் கட்சித்தலைமையின் காதுக்கு கொண்டு சென்றுள்ளனராம்.
கிருபாநிதியின் பதவி விரைவில் பறிக்கப்படும் என்று தெரிகிறது. அப்படி பறிக்கப்பட்டால் அடுத்த தலைவராகும்வாய்ப்பு கோவை எம்.பியான சி.பி. ராதாகிருஷ்ணனுக்குக் கிடைக்கலாம் என்றும் பேசப்படுகிறது.
-->
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications