சென்னை- திருப்பதி பஸ் கட்டணம் குறைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை- திருப்பதி, திருமலை இடையிலான பஸ் கட்டணத்தை ஆந்திர அரசு குறைத்துள்ளது.
திருப்பதிக்கு வரும் பக்தர்களின் வசதிக்காகவும், பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இந்த முடிவுஎடுக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டண விகிதத்தின்படி சென்னையிலிருந்து திருப்பதிக்கு பஸ் கட்டணம் ரூ 55ல் இருந்து ரூ 48 ஆகக்குறைக்கப்பட்டுள்ளது.
அதே போல சென்னையில் இருந்து திருமலைக்கு பஸ் கட்டணம் ரூ. 75ல் இருந்து ரூ. 68 ஆகக்குறைக்கப்பட்டுள்ளது.
நேற்று முதல் இந்த பஸ் கட்டண குறைப்பு அமலுக்கு வந்துள்ளது.
-->












Click it and Unblock the Notifications