பதவியேற்பைப் புறக்கணித்த மம்தா பானர்ஜி
டெல்லி:
நேற்று நடந்த புதிய அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியை திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிபுறக்கணித்தார்.
அதே நேரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தனது கட்சியின் ஆதரவு தொடரும் என அவர் கூறியுள்ளார்.
அவரை எப்படியாவது சமாதானப்படுத்தி அமைச்சரவையில் இடம் பெறச் செய்ய பிரதமர் வாஜ்பாய் முயன்றுவருகின்றார்.
ஆனால், தனக்கு ரயில்வே துறையைத் தராவிட்டால் அமைச்சர் பதவியே வேண்டாம் என மம்தா பானர்ஜிகூறிவிட்டதாகத் தெரிகிறது. மேலும் மேற்கு வங்கத்தைத் தலைமையிடமாகக் கொண்ட கிழக்கு ரயில்வேயைஇரண்டாகப் பிரிக்கும் மத்திய அரசின் திட்டத்துக்கும் அவர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இதனை இரண்டாகப் பிரிக்கத் திட்டமிட்ட நிதிஷ்குமாரை அந்தப் பதவியில் இருந்து விலக்ககுவதற்கு வசதியாகரயில்வே துறையையே மம்தா பானர்ஜி கேட்டு வருகிறார்.
மம்தாவுக்கு நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பதவியை தர வாஜ்பாய் முன் வந்தார். இது தொடர்பாகஅவருடன் பேச்சு நடத்தப்பட்டது. இப்போது நிலக்கரித்துறை துணைப் பிரதமர் அத்வானியின் வசம் உள்ளது.ஆனால், இந்தத் துறையை மம்தா விரும்பவில்லை என்று தெரிகிறது.
ஜார்ஜ் பெர்னாண்டசின் சமதா கட்சியைச் சேர்ந்தவர் நிதிஷ்குமார். பெர்னாண்டஸ் எதிர்ப்பார் என்பால்நிதிஷ்குமாரை நீக்க பிரதமர் விரும்பவில்லை.
நிதீஷ்குமாரின் ரயில் போக்குவரத்துத் துறைக்குப் போட்டியாக கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட தரைவழிப்போக்குவரத்துத் துறையைத் தந்து மம்தாவை சமாதானப்படுத்தவும் முயற்சி இப்போது நடக்கிறது.
அமைச்சர்கள் பொறுப்பேற்பு:
நேற்று அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்ட அனைவரும் இன்று காலை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில்சென்று பொறுப்பேற்றுக் கொண்டனர். பணிகளையும் இன்றே துவக்கினர்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications