தமிழகத்திற்கு 10 மத்திய அமைச்சர்கள்
சென்னை:
மத்திய அமைச்சரவையில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் இடம் பெற்றுள்ளனர். இது ஒரு புதியசாதனை ஆகும். தமிழகத்திலிருந்து இதுவரை இத்தனை பேர்மத்திய அமைச்சர்களாக இருந்ததில்லை.
பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று (திங்கள்கிழமை) மாற்றியமைக்கப்பட்டது. இப்போது அமைச்சரவையில் மொத்தம்76 பேர் இடம் பெற்றுள்ளனர்.
அப்போது தமிழகத்தைச் சேர்ந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி, திருநாவுக்கரசர், என்.டி. சண்முகம், ஏ.கே. மூர்த்தி ஆகியோர் புதிய அமைச்சர்களாகப்பொறுப்பேற்றனர். இதைத் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.
இதற்கு முன்பு காங்கிரஸ் கட்சி மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது ஒன்று அல்லது இரண்டு பேரே மத்திய அமைச்சர்களாகும் பாக்கியத்தைப்பெற்றிருந்தனர். காங்கிரஸுக்குப் பின்னால் வந்த வி.பி.சிங் ஆட்சியிலும் இதே நிலையே நீடித்தது.
ஆனால் பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு இந்நிலை மாறியது. மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு அதிக அளவில் முக்கியத்துவம்கொடுக்கப்பட்டது.
தற்போது மத்திய அமைச்சரவையில் உள்ள 10 தமிழர்களில் திமுகவுக்கு 3, பாஜகவுக்கு 3, மதிமுகவுக்கு 2 மற்றும் பாமகவுக்கு 2 என பிரதிநிதித்துவம்கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சர்கள் விவரம்:
முரசொலி மாறன், டி.ஆர். பாலு, ராஜா, ஜனா கிருஷ்ணமூர்த்தி, பொன். ராதாகிருஷ்ணன், திருநாவுக்கரசர், என்.டி. சண்முகம், ஏ.கே. மூர்த்தி, செஞ்சிராமச்சந்திரன், கண்ணப்பன்.
-->
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications