வைகோ மீது திடீர் பாய்ச்சல் ஏன்?

Subscribe to Oneindia Tamil

வைகோ எப்போதுமே விடுதலைப் புலிகளை ஆதரித்துத் தான் வந்திருக்கிறார். ஆனால், இப்போது முதல்வர்ஜெயலலிதா அவர் மீது திடீர் பாய்ச்சல் காட்டியிருப்பது பலவிதமான சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியில் நாடாளுமன்றத் தேர்தல் திட்டமிட்டதற்கும் முன்னதாகவே வந்துவிடும் என்ற கருத்து பரவலாக நிலவிவருகிறது. அதற்காக கட்சியை தயார் செய்யத்தான் மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திடீர் தேர்தல் வந்தால் காங்கிரஸ்- திமுக கூட்டணி வருவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. திமுக தொடர்ந்துஅதிருப்தியுடன் தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வருகிறது.

அப்படிப்பட்ட நிலையில் பா.ஜ.கவுடன் கூட்டணி சேருவதைத் தவிர அதிமுகவுக்கு வேறு வழியில்லை. ஆனால்,அப்போது வைகோ அங்கிருப்பது ஜெயலலிதாவுக்கு பெரும் இடைஞ்சலாக இருக்கும்.

தமிழகத்தில் உள்ள எம்.பி. தொகுதிகளை பா.ஜ.க மட்டுமின்றி வைகோவுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலைஜெயலலிதாவுக்கு ஏற்படும். இதை அவர் விரும்பவில்லை. இதனால் இப்போது நெருக்கடி தந்து வைகோவைதேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலக்க அவர் மாஸ்டர் பிளான் போடுவதாகத் தெரிகிறது.

ஆனால், வைகோ தொடர்ந்து பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானியுடன் நெருக்கமாகவே இருந்துவருகிறார்.

வைகோவுக்கு மத்திய அமைச்சர் பதவி தர பிரதமர் பலமுறை முன் வந்தும் கூட அதை ஏற்க மறுத்துவிட்டார்.இந்தமுறையும் கூட வைகோவுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்பதில் வாஜ்பாய் மட்டுமின்றி அத்வானி, பிரமோத்மகாஜன் போன்ற மூத்த தலைவர்களும் ஆர்வமாக இருந்தனர்.

ஆனால், தனக்கு ஆர்வமில்லை என்று வைகோ கூறிவிட்டதால் அவருக்கு அமைச்சரவையில் இடம்தரப்படவில்லை. தங்களுக்கு பிரச்சனை தராத கூட்டணிக் கட்சித் தலைவர் என்ற வகையில் வைகோவை மதித்துவருகிறது பா.ஜ.க.

மத்தியில் ஆட்சியில் உள்ள கூட்டணியில் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், வைகோ இருவருமேபுலிகள் மீது சாப்ட் கார்னர் கொண்டவர்கள். இதனால் இலங்கை விவகாரத்தில் இவர்கள் இருவரும் எந்தவிதமானகருத்தையும் தன்னிடம் திணிக்கக் கூடாது என்று வாஜ்பாய் இருவரிடமும் ஆரம்பத்திலேயே கூறிவிட்டார்.

வெளியுறவுத்துறையும், உளவுப் பிரிவான ராவும் எடுக்கும் முடிவுகளை மத்திய அரசு நிறைவேற்றும், இதில்நீங்களும் ஜார்ஜும் தலையிடக் கூடாது என்று வைகோவுடன் ஜென்டில்மேன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார்வாஜ்பாய்.

இதனால் மத்திய அரசு இலங்கை விவகாரத்தில் எடுத்த முடிவுகளில் வைகோ தலையிட்டதில்லை. ஆனாலும்தொடர்ந்து புலிகளை ஆதரித்தும், பல இடங்களில் பேசும்போது உணர்ச்சிவசப்பட்டு அழுதும் வந்திருக்கிறார்வைகோ.

வைகோ மட்டுமல்லாமல் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாசும் வெளிப்படையாகவே நான் புலிகளைஆதரிக்கிறேன், முடிந்தால் ஜெயலலிதா கைது செய்யட்டும் என்று சவாலே விட்டுள்ளார்.

இந் நிலையில் வைகோ ஏதோ இப்போது தான் இது போல பேசுவது மாதிரி திடீர் நடவடிக்கை எடுக்க ஜெயலலிதாமுயல்வது, சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை மனதில் வைத்து மட்டும் எடுக்கப்படும் நடவடிக்கையாகத்தெரியவில்லை.

வைகோவை அரசியல்ரீதியில் கட்டம் கட்டும் வேலையை அவர் ஆரம்பித்திருப்பதாகவே தெரிகிறது. மத்திய அரசுவைகோவை விட்டுக் கொடுப்பது சந்தேகம் தான். இருந்தாலும் ஜெயலலிதாவின் நெருக்குதலால் வைகோவுக்குபிரதமரும் அத்வானயும் அறிவுரை சொல்ல வாய்ப்பிருக்கிறது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+