வைகோவை உடனே கைது செய்ய சுவாமி கோரிக்கை
பாஸ்டன் (அமெரிக்கா):
விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் வைகோவைக் கைது செய்ய ஜெயலலிதாவுக்கு முழு ஆதரவு தருவதாக ஜனதாகட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் உள்ள சுப்பிரமணியம் சுவாமி இது தொடர்பாக அங்கிருந்து அறிக்கைவெளியிட்டுள்ளார். அதன் விவரம்:
தீவிரவாதத்துக்கு எதிரான ஜெயலலிதாவின் போராடத்தை நான் முழு மனதுடன் ஆதரிக்கிறேன். ராஜிவ்காந்தியைக் கொன்றவர்களுக்கு ஆதரவாக வைகோ பேசி வருவதை ஏற்க முடியாது.
லோக்சபா உறுப்பினராக இருந்து கொண்டு நாட்டுக்கு எதிரானவர்களுக்கு ஆதரவு தரும் வைகோவுக்கு எதிராகலோக்சபா சபாநாயகரிடம் அதிமுக எம்.பிக்கள் புகார் தந்து அவருக்கு தண்டனை தரக் கோர வேண்டும்.
வைகோவுக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசின் அனுமதிக்காக மாநில அரசு காத்திருக்கக் கூடாது.
வைகோ பேசாமல் யாழ்பாணத்துக்குச் சென்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு தளபதியாகமாறிவிட வேண்டும். அதைவிட்டுவிட்டு தமிழகத்தில் இருந்து கொண்டு தமிழ்நாட்டின் பெயரைக் கெடுக்கக்கூடாது. பாராத மாதாவுக்கு களங்கம் விளைவிக்கக் கூடாது.
தமிழ் தேசிய மீட்புப் படை, தமிழ் தேச விடுதலைப் படை ஆகிய அமைப்புகளுக்குத் தடை விதிக்க ஜெயலலிதாஎடுத்த நடவடிக்கைகள் மிகுந்த பாராட்டுக்குரியவை. இந்த விஷயத்தில் மிகுந்த தேசப்பற்றுடன் செயல்பட்டுள்ளார்ஜெயலலிதா.
ஆனால், முன்பு முதல்வராக இருந்த கருணாநிதி இந்த அமைப்புகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும்எடுக்கவில்லை என்று சுவாமி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications