பிரதமர், அத்வானிக்கு ஜெ. புகார் கடிதம்
சென்னை:
விடுதலைப்புலிகளை ஆதரித்து வரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை பொடா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப் போவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக துணைப் பிரதமர் அத்வானிக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இதன் நகலை பிரதமர்வாஜ்பாய்க்கும் அனுப்பியுள்ளார்.
மதுரை அருகே திருமங்கலத்தில் கடந்த ஜூன் 29ம் தேதி நடந்த ஒரு கூட்டத்தில் புலிகளுக்கு ஆதரவாகப்பேசியதாக வைகோ மீது குற்றம் சாட்டியுள்ள ஜெயலலிதா, அந்தக் கூட்டத்தில் வைகோ பேசிய பேச்சு குறித்தவீடியோ கேசட்டையும் அத்வானிக்கு அனுப்பியுள்ளார்.
அத்வானிக்கு எழுதிய கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளதாவது:
வைகோவின் வன்முறையைத் தூண்டும் இந்த ஆவேசப் பேச்சுக்களைக் கடுமையாக இரும்புக்கரம் கொண்டுஅடக்கவில்லை என்றால், நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள "சிமி", "அல்-கொய்தா" ஆகிய தீவிரவாதஅமைப்புகளும் உற்சாகமடைந்து விடுவார்கள்.
பொடா சட்டத்தை ஆதரித்து நாடாளுமன்றத்தில் ஓட்டுப் போட்ட வைகோ இப்போது அந்தச் சட்டத்தை எதிர்ப்பதுமுரணாக உள்ளது.
வைகோவின் பேச்சு சந்தேகத்திற்கே இடமில்லாமல் சட்டவிரோத செயலாகும். இதனால் அவர் மீது பொடா மற்றும்1967ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்.
இதுதொடர்பாக வைகோ மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர எனது அரசுக்கு வேறு வழியில்லை. தொடர்ந்துவிடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வைகோ செயல்பட்டு வருகிறார். சட்டத்தை மதிக்காமல் அவர் நடந்துவருகிறார்.
இதுபோன்ற சட்டவிரோதப் பேச்சுக்களில், செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டுள்ள தலைவர்களுடன் உறவுவைத்திருப்பது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு நல்லதல்ல, நாட்டுக்கும் நல்லதல்ல. வைகோ போன்றதலைவர்களை ஆரம்பத்திலேயே தட்டி வைப்பதே நல்லது.
வைகோவின் தொடர்ந்த இந்தப் பேச்சுக்களைப் புறக்கணித்தால் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக தமிழகஅரசும் மத்திய அரசும் எடுத்து வரும் நடவடிக்கைகளும் முயற்சிகளும் கேலிக் கூத்தாக ஆகிவிடும் என்று தனதுகடிதத்தில் கூறியுள்ளார் ஜெயலலிதா.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications