மத்திய அமைச்சரவையில் மீண்டும் மாற்றம்?
டெல்லி:
மத்திய பிரதேச பா.ஜ.க. தலைவராக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் உமா பாரதி விரைவில்நியமிக்கப்படுவதைத் தொடர்ந்து மீண்டும் மத்திய அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவரப்படும் என்றுதெரிகிறது.
கடந்த திங்கள்கிழமை (ஜூலை 1) மத்திய அமைச்சரவையில் பெரும் மாறுதல்கள் செய்யப்பட்டன. மேலும் 4கேபினட் அமைச்சர்களும் 9 இணை அமைச்சர்களும் புதிதாக நியமிக்கப்பட்டனர்.
பா.ஜ.க. தலைவராக இருந்த ஜனா கிருஷ்ணமூர்த்தியை வம்படியாக அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வைத்தபின்னர், அவரைச் சமாதானப்படுத்துவதற்காக சட்டத்துறை அமைச்சர் பதவி அவருக்கு அளிக்கப்பட்டது.
நிதி அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹாவும் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங்கும் தங்கள்பதவிகளை ஒருவருக்கொருவர் மாற்றிக் கொண்டனர்.
முன்னதாக யஷ்வந்த் சின்ஹாவைப் அமைச்சர் பதவியிலிருந்து தூக்கிவிட்டு அவரை உத்தராஞ்சல் மாநிலமுதல்வராக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து அவருக்குவெளியுறவுத்துறை அளிக்கப்பட்டது.
இதற்கிடையே திரிணாமூல் காங்கிரஸ் தலைவரான மம்தா பானர்ஜி தனக்கு ரயில்வே துறை அளிக்கப்பட வேண்டும்என்று கடைசி வரை பிடிவாதம் பிடித்து வந்தார். ஆனால் அத்துறையை அவருக்கு அளிக்க பிரதமர் வாஜ்பாய்மறுத்ததையடுத்து, புதிய அமைச்சரவைப் பதவியேற்பு நிகழ்ச்சியையே புறக்கணித்தார் மம்தா.
இருந்தாலும் அவர் மீண்டும் அமைச்சரவைக்கு வரலாம் என்று இன்னும் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மத்திய பிரதேச பா.ஜ.க. தலைவராக உமா பாரதி நியமிக்கப்படவுள்ளார். இதையடுத்து தற்போதுஅவர் வகித்து வரும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி காலியாகவுள்ளது.
எனவே இத்துறைக்கு வேறு அமைச்சரை நியமிப்பதற்காக விரைவில் மத்திய அமைச்சரவை மீண்டும் மாற்றப்படும்என்று தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications