வைகோ கைது விவகாரத்தில் திமுக தலையிடாது: கருணாநிதி
திருச்சி:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது விவகாரத்தில் நான் தலையிட மாட்டேன் என்று திமுக தலைவர்கருணாநிதி கூறினார்.
இன்று திருச்சியில் நிருபர்களிடம் பேசிய கருணாநிதி,
விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக வைகோவை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப் போவதாகத்தமிழக அரசு மிரட்டி வருகிறது.
ஆனால் வைகோ கைது செய்யப்பட்டால் அந்த விவகாரத்தில் நான் தலையிட மாட்டேன். இது தொடர்பாக துணைப்பிரதமரான என்னுடைய நண்பர் அத்வானியிடமும் எந்தவிதத்திலும் முறையிட மாட்டேன்.
இருந்தாலும் அரசியல் பழிவாங்கலுக்காக இந்தப் பொடா சட்டம் பயன்படுத்தப்படுவதை திமுக தொடர்ந்துஎதிர்க்கும்.
கடந்த ஆண்டு என்னை அதிமுக அரசு கைது செய்த போது நான் நடித்ததாகக் கூறி மதிமுகவினர் கேலி செய்தனரேஒழிய அந்தக் கைதைக் கண்டிக்கவே இல்லை என்றார் கருணாநிதி.
"தமிழகத்தில் புலிகள் நடமாட்டத்தை ஏற்க முடியாது":
இதற்கிடையே புலிகளை ஆதரிக்கக் கூடாது என்று வைகோவை எச்சரிக்கை செய்வதோடு நிறுத்திக் கொள்ளலாம்என்று தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் இல. கணேசன் கூறினார்.
இன்று நிருபர்களிடம் கணேசன் கூறியதாவது:
இலங்கைப் பிரச்சனையில் தீர்வு ஏற்பட வேண்டும் என்று பா.ஜ.கவுக்கு எப்போதுமே அக்கறை உண்டு.
ஆனால் தடை செய்யப்பட்டுள்ள புலிகள் இயக்கத்தின் நடமாட்டம் தமிழகத்தில் இருப்பதை அனுமதிக்க முடியாது.புலிகளைப் பற்றி தமிழகத்தில் பேச வேண்டிய அவசியமும் இல்லை.
இதுவரை புலிகளை ஆதரித்துப் பேசி வந்த வைகோவை எச்சரிக்கை செய்வதோடு நிறுத்திக் கொள்ளலாம் என்றுகணேசன் கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications