For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைகோவை பா.ஜ.க. கைவிடாது: இல.கணேசன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பாரதீய ஜனதாவுக்கு இக்கட்டான சூழ்நிலை வந்தபோதெல்லாம் அசராமல் உடன் நின்றவர் வைகோ. அவருக்குசட்டத்துக்கு உட்பட்டு அனைத்து வகையிலும் பா.ஜ.க. துணை நிற்கும் என அக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.

வைகோவை கைது செய்யப் போவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்த பின்னர் பா.ஜ.க. தரப்பில் எந்த விதமானகருத்தும் தெரிவிக்கப்படாமல் இருந்தது. தமிழக பாரதீய ஜனதாக் கட்சி நிர்வாகிகள் மயான அமைதி காத்துவந்தனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதிமுக இடம் பெற்றிருப்பதால், பொடா சட்டத்தை கொண்டு வருவதற்காககடுமையாக போராடிய பா.ஜ.கவின் நிலை இந்த விஷயத்தில் என்ன என்பது பெரும் எதிர்பார்ப்புக்குள்ளானது.

அகில இந்திய பாஜக தலைவர்கள் இந்த விஷயம் தொடர்பாக பட்டும்படாமலும் பதில் அளித்து வருகின்றனர்.விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.

இந் நிலையில் தமிழக பாஜக பொதுச் செயலாளரான இல.கணேசன் அக் கட்சியின் அமைதியைக் கலைத்துள்ளார்.

இல. கணேசன் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

பொடோ சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்புக்கு ஆதரவாகப் பேசுவது தவறா என்றுதெரியவில்லை. இது தொடர்பாக பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. எனவே, சட்ட நிபுணர்களுடன் பேசி,ஆராய்ந்த பின்னர் தான் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவசரப்பட்டு வைகோவை கைது செய்யக் கூடாது. விடுதலைப் புலிகள் விவகாரத்தில் மதிமுகவுக்கும்பா.ஜ.கவுக்கும் இடையே கொள்கைரீதியில் மாறுபாடு உள்ளது. இதனால் விடுதலைப் புலிகள் விஷயத்தில்மதிமுகவுக்கு பா.ஜ.க. ஆதரவு தர முடியாது.

தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாகப் பேசுவதால் ஒருவரைக் கைது செய்துவிட முடியாது என்று மத்தியஉள்துறை இணையமைச்சரே கூறியிருக்கிறார். இதனால் வைகோவை கைது செய்ய அவசரம் காட்ட வேண்டாம்என்று ஜெயலலிதா அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

பல இக்கட்டான சூழ்நிலைகளில் பா.ஜ.கவுக்கு உறுதுணையாக இருந்த தலைவர் வைகோ. அவருக்கு நாங்களும்சட்டத்துக்குட்பட்டு முழு ஆதரவு தருவோம் என்று இல.கணேசன் கூறியுள்ளார்.

இதற்கிடையே அமெக்காவிலிருந்து ஜார்ஜ் பெர்னாண்டஸிடம் தொலைபேசியில் வைகோ பேசியிருப்பதாகமதிமுக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

12ம் தேதி வைகோ சென்னை திரும்பவுள்ளார். அதன் பிறகு தான் இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும்என்பது தெரிய வரும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X