காவிரி: நாளை பிரதமருக்கு கர்நாடகம் பதில்
பெங்களூர்:
தமிழகத்துக்கு காவிரியில் நீர் விடுமாறு பிரதமர் வாஜ்பாய் விடுத்த கோரிக்கை குறித்து நாளை கர்நாடகஅமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இதன் பின்னர் கர்நாடகம் தனது பதிலை பிரதமருக்குஅளிக்கும்.
12 நாட்களுக்கு முன் பிரதமர் வாஜ்பாய் இந்த கோரிக்கையை கர்நாடகத்திடம் முன் வைத்தார். ஆனால், இப்போதுபதில் சொல்வோம்.. பின்னர் பதில் சொல்வோம் என்று கர்நாடகம் காலம் கடத்தி வருகிறது.
எங்களிடம் போதிய அளவு தண்ணீர் இல்லை, இதனால் தமிழகத்துக்குத் தண்ணீர் தர முடியாது என்று முதல்வர்கிருஷ்ணா கூறியுள்ளார். ஆனால், பிரதமரிடம் இன்னும் தனது பதிலைத் தெரிவிக்கவில்லை.
இந் நிலையில் நாளை கர்நாடக அமைச்சரவை கூடுகிறது. இதில் பிரதமரின் கோரிக்கை தொடர்பாகவிவாதிக்கப்பட்டு அவருக்கு பதில் அனுப்பப்படும் என சட்டத்துறை அமைச்சர் சந்திரே கெளடா இன்றுபெங்களூரில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், இப்போதுள்ள நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் தரும் சூழலில் கர்நாடகம் இல்லை. காவிரியின்குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர், ஹாரங்கி, ஹேமாவதி, கபினி ஆகிய அணைக்கட்டுகளில் தண்ணீர்போதுமான அளவு இல்லை.
இரு நாட்களாகத் தான் காவிரி நதி நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.
எங்களது அணைகளின் நிலைமை குறித்து எப்போது வேண்டுமானாலும் நதி நீர் நடுவர் மன்றம் வந்துபார்வையிடலாம் என்றார் சந்திரே கெளடா.
இதன்மூலம் தமிழகத்துக்கு தண்ணீர் விட முடியாது என்ற பதிலைத் தான் நாளை பிரதமர் வாஜ்பாய்க்கு கர்நாடகம்அனுப்பவுள்ளது என்பது தெளிவாகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications