சேர்களை தூக்கி வீசி சண்டை போட்ட பெண் கவுன்சிலர்கள்
கோவில்பட்டி:
கோவில்பட்டி நகராட்சியில் பெண் கவுன்சிலர்கள் இடையே பயஙகர மோதல் நடந்தது. பெண் கவுன்சிலர்களைசேர்களை தூக்கி வீசி, ஆண் கவுன்சிலர்களுக்கு தாங்கள் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை என்பதைநிரூபித்தனர்.
வழக்கமாக ஆண் கவுன்சிலர்கள் தான் டேய்.. வாடா வெளியே.. சவுண்டு விட்டு சேர்களைத் தூக்கி பெளலிங்போடுவார்கள். நகராட்சித் தலைவரின் மேஜையை உருட்டி விளையாடுவார்கள். இதைப் பார்த்து பெண்கவுன்சிலர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடுவார்கள்.
ஆனால், கோவில்பட்டியில் எதிர்ப்பதமான சம்பவம் நடந்தது. நகராட்சிக் கூட்டம் தொடங்கியவுடன் வளர்ச்சிப்பணிகள் தொடர்பாக அதிமுக பெண் கவுன்சிலருக்கு எதிராக சில எதிர்க் கட்சிப் பெண் கவுன்சிலர்கள் கருத்துத்தெரிவித்தனர்.
இதையடுத்து அதிமுக பெண் கவுன்சிலர்கள் பாயந்து ஓடி வந்த எதிர்க் கட்சி கவுன்சிலர்களுடன் மோதினர். உடனேஅனைத்து எதிர்க் கட்சி பெண் கவுன்சிலர்களும் ஒன்று சேர்ந்து அதிமுக பெண் கவுன்சிலர்களைப் பார்த்துஒருமையில் திட்டினர்.
இரு தரப்பினரும் கை நீட்டி வாடி... போடி.. என ஏக வசனத்தில் பேசினர். இந் நிலையில் யாரும் எதிர்பாராதநிலையில் சில பெண் கவுன்சிலர்கள் பிளாஸ்டிக் சேர்களைத் தூக்கி வீசினர். இதனால் ஆண் கவுன்சிலர்கள்செய்வதறியாது திகைத்து நின்றனர்.
சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த நகராட்சித் தலைவர் வனிதா ரமணி இடத்தைக் காலி செய்துவிட்டு கூட்டத்தைபாதியிலேயே விட்டுவிட்டு ஓடினார்.
தொடர்ந்து சேர்களை பறக்கவிட்டு ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்த பெண் கவுன்சிலர்கள் நீண்ட நேரத்துக்குப்பின்னர் தான் அமைதியாகினர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications