விவசாயிகள் வாழ்வுடன் விளையாடும் அதிமுக கரை வேட்டிகள்
தஞ்சாவூர்:
நீர் இல்லாததால் விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வரும் விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட மாற்று வேலைவாய்ப்புத் திட்டத்தில் அதிமுக கரை வேட்டிகள் புகுந்து அட்டூழியம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
காவிரியில் தண்ணீர் இல்லாததால் குறுவை பயிர் சாகுபடி நின்று போய்விட்டது. ஊருக்கே அரிசி தந்த விவசாயிகள்பட்டினி கிடக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் வேறு கூலி வேலை தேடி கேரளா, ஆந்திரா பக்கமாகலட்சக்கணக்கான விவசாயிகள் இடம் பெயர்ந்து வருகின்றனர்.
இவர்களுக்கு மாற்று வேலை தருவதற்காக சுமார் 160 கோடி ரூபாயில் திட்டங்களை அறிவித்தார் முதல்வர்ஜெயலலிதா.
இத் திட்டத்தின்படி வெறும் 20 ரூபாய் கூலிக்காக கேரளா, ஆந்திராவில் போய் விவசாயிகள் கஷ்டப்படுவதைத்தவிர்க்கவும், அவர்களுக்கு சொந்த ஊர்களிலேயே கிணறு தோண்டுவது, ஏரிகள் தூர் எடுப்பது, சாலைகள்போடுவது போன்ற வேலைகளைத் தந்து அதற்கு கூலியும் தரவும் திட்டமிடப்பட்டது.
தினக் கூலியாக ரூ. 50க்கும் மேல் தரவும், கூலியின் ஒரு பகுதியை அரிசியாகத் தரவும் முடிவு செய்யப்பட்டது.
ஆனால், இந்த வேலைகளுக்கு விவசாயிகளைத் தேர்வு செய்வதில் அதிமுகவின் புகுந்து இந்தத் திட்டத்தையேகேலிக் கூத்தாக்கி வருவதாக விவசாய சங்கங்கள் கூறியுள்ளன.
தங்களுக்கு வேண்டியவர்களை விவசாயி என்று கூறி வேலை வாங்கித் தருவது, பணம் வாங்கிக் கொண்டு கூலிவேலைக்கு ஆட்களை சேர்த்துவிடுவது என கரை வேட்டிகள் அட்டூழியம் ஆரம்பித்துள்ளது.
இதனால் ஏற்கனவே அரை பட்டினியில் தவித்து வரும் உண்மையான விவசாயிகள் வெறுத்துப் போய் உள்ளனர்.
விவசாயிகளுக்கு வேலைவாய்ப்புத் தர ஒவ்வொரு ஊரிலும் குழு அமைத்து, அந்தக் குழு மூலமாக உண்மையானவிவசாயிகளைத் தேர்ந்தெடுத்து வேலை தர வேண்டும் என விவசாயத் தொழிலாளர் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.
இந்தத் திட்டத்தை ஜெயலலிதா அறிவித்தேபோதே இதனால் விவசாயிகளைவிட அதிமுகவினர் தான் லாபம்அடையப் போகிறார்கள் என்று திமுக புகார் கூறியது.
இதையடுத்தாவது இத் திட்டத்தில் தனது கட்சியினரை தலையிட விடாமல் முதல் தடுத்திருக்கலாம்.
முதல்வரால் மிக நல்ல நோக்கத்துடன் கொண்டு வரப்பட்ட ஒரு திட்டம் அவரது கட்சியினரால் சீரழிக்கப்படுவதுவேதனையான விஷயம்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications