பஸ் ரிப்பேர்: நடு ரோட்டில் தவித்த பயணிகளுக்கு உதவிய ஜெயலலிதா
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் இல்லம் அருகே நடுப் பாலத்தில் பிரேக் டவுன் ஆகி நின்ற பஸ்ஸை தள்ளிக் கொண்டிருந்தபயணிகளைப் பார்த்த முதல்வர் ஜெயலலிதா, தனது காரை நிறுத்தி பயணிகளுக்கு மாற்று பஸ்சை ஏற்பாடு செய்து கொடுத்து விட்டுதனது வீட்டிற்குச் சென்றார்.
பெசன்ட் நகரிலிருந்து பெரம்பூர் வரை செல்லும் 29 சி பஸ் வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணிக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன்சாலையில் உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று பிரேக் டவுன் ஆகி நடுப்பாலத்தில் நின்றுவிட்டது. அந்த நேரத்தில் முதல்வர் ஜெயலலிதா கோட்டையிலிருந்து தனது இல்லம் உள்ள போயஸ் கார்டன் பகுதிக்கு வந்துகொண்டிருந்தார்.
முதல்வரின் கார் பாலத்தை அணுகியபோது, நடுப்பாலத்தில் பஸ் நின்று கொண்டிருப்பதையும் பயணிகள் அனைவரும் கீழேஇறங்கி பஸ்சை தள்ளிக் கொண்டிருப்பதையும் பார்த்து தனது காரை பஸ் அருகே நிறுத்தினார்.
வெயிலில் பஸ்சை தள்ளிக் கொண்டிருந்த பயணிகள் முதல்வர் தங்களை நோக்கி வருவதைப் பார்த்ததும் அடிக்கடி இப்படி ஆகிவிடுகிறது மேடம், நீங்கள்தான் இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
பஸ்சின் டிரைவரிடம் என்ன நடந்தது என்று ஜெயலலிதா கேட்டார். என்ஜினில் ஆயில் பிளாக் எற்பட்டுள்ளதாக டிரைவர் கூறவேஉடனடியாக இன்னொரு பஸ்சை இந்த இடத்திற்குக் கொண்டு வருமாறு தனது செயலாளர் மூலமாக பெசன்ட் நகர் டிப்போவுக்குஉத்தரவிட்டார்.
உத்தரவு சென்ற சில நிமிடங்களில் உடனடியாக மாற்று பஸ் டிப்போவில் இருந்து கிளம்பியது. இதையடுத்து உங்களுக்காகஇன்னொரு பஸ் வந்து கொண்டுள்ளது. அதில் ஏறிச் செல்லுங்கள் என்று பயணிகளிடம் புன்முறுவலுடன் கூறிய ஜெயலலிதாபின்னர் தனது காரில் ஏறி வீட்டுக்குப் போனார்.
இதனால் மகிழ்ந்து போன பஸ் பயணிகள் ஜெயலலிதாவை வாழ்த்தி கோஷமிட்டனர்.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications