காவிரி விவகாரம்: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
சென்னை:
காவிரி ஆணையக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுமாறு பிரதமர் வாஜ்பாய்க்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம்எழுதியுள்ளார்.
அதில் கருணாநிதி கூறியிருப்பதாவது:
தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 205 டி.எம்.சி. நீரைத் திறந்துவிட வேண்டும் என்ற காவிரி நடுவர் மன்றத்தின்இடைக்காலத் தீர்ப்பை அமலாக்குவதற்காகத் தான் உங்கள் தலைமையில் காவிரி நதி நீர் ஆணையம்அமைக்கப்பட்டது.
ஆனால், நடுவர் மன்றத்தின் தீர்ப்பை கர்நாடகம் மதிக்காமல் இருந்து வருகிறது. இந்தத் தீர்ப்புப்படி தர வேண்டியநீரை தமிழகத்துக்குத் தராததால் காவிரிப் பாசன விவசாயிகள் பெரம் துயரத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனால் உடனடியாக காவிரியில் 3 டி.எம்.சி. நீரைத் திறந்துவிடுமாறு கர்நாடகத்துக்கு நீங்கள் உத்தரவிட்டதற்குமிகுந்த நன்றி. ஆனால், உங்கள் வேண்டுகோளை கர்நாடகம் ஏற்கவில்லை.
எனவே, காவிரி நதி நீர் ஆணையத்தை உடனடியாகக் கூட்டி நீர் கிடைக்கச் செய்து தமிழக விவசாயிகளுக்கு உதவவேண்டும்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் கருணாநிதி கூறியுள்ளார்.
கர்நாடகம் இன்று பதில்:
இந் நிலையில் காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடுகிறது. இதில்பிரதமருக்கு அனுப்ப வேண்டிய பதில் குறித்து முடிவு செய்யப்படவுள்ளது.
நீர் விடுவது குறித்து பேசப்படப் போவதில்லை. ஏனென்றால் நீர் தர முடியாது என்று முதல்வர் கிருஷ்ணா மிகத்தெளிவாக பலமுறை கூறிவிட்டார்.
இந்த பதிலை வாங்கிக் கொண்டு பிரதமர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்று தெரியவில்லை.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications