மேயர் அங்கியை அணிந்து வந்த மதுரை துணை மேயர்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

துணை மேயராக இருப்பவர், மேயர் பொறுப்பை ஏற்கலாமா என்ற வழக்கு நடந்து கொண்டிருக்கையில், மதுரை துணை மேயர்சின்னச்சாமி மேயருக்குரிய அங்கி அணிந்து, மேயர் இருக்கையில் அமர்ந்து பைல்களில் கையெழுத்திட்டு பரபரப்பைஏற்படுத்தினார்.

மதுரை மேயர் செ.ராமச்சந்திரன் சில நாட்கள் விடுப்பில் சென்றுள்ளார். இதையடுத்து நான் திரும்பி வரும் வரை துணை மேயர்சின்னச்சாமி எனது பொறுப்புகளை கவனிப்பார் என்று மாநகராட்சி ஆணையாளர் கார்த்திக்கிற்கு கடிதம் அனுப்பினார்.இதையடுத்து நேற்று மாநகராட்சி அலுவலகத்திற்கு துணை மேயர் சின்னச்சாமி, மேயருக்குரிய அங்கியை அணிந்து வந்தார்.பின்னர் மேயரின் இருக்கையில் அமர்ந்தார். மேயரின் டேபிளில் இருந்த பைல்களைப் பார்த்து கையெழுத்தும் போட்டார்.

சென்னையில் துணை மேயர் கராத்தே தியாகராஜன், மேயர் (பொறுப்பு) என்று போட்டுக் கொள்வது குறித்தும், மேயரின் அங்கியைபயன்படுத்துவது குறித்தும் பெரும் சர்ச்சை எழுந்து, வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், மதுரை துணை மேயரின் இந்தச்செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கை சுத்தமான, மிக நேர்மையான நபர் என்று பெயர் வாங்கியவர் சின்னச்சாமி. பதவிக்காக அலையாதவர்.

நீதிமன்றத்தில் மேயரின் அதிகாரம் குறித்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சின்னச்சாமி ஏன் மேயர் அங்கியை அணிந்தார்என்று தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+