மலேசியாவில் குழந்தைகளை கடத்தி விற்ற கும்பல் கைது
கோலாலம்பூர்:
மலேசியாவில் குழந்தைகளைக் கடத்தி விற்று வந்த பெரும் கடத்தல் கும்பல் பிடிபட்டுள்ளது.
போர்னியோ தீவின் காவல்துறை தலைவர் முகம்மத் யூசுப் ஜாபர் கூறுகையில்,
கடந்த 6 ஆண்டுகளாகவே இந்தக் கடத்தல் நடந்து வந்துள்ளது. குழந்தைகள் இல்லாத தம்பதிகளிடம் இந்தக்கும்பல் குழந்தைகளை விற்று வந்துள்ளது.
குழந்தைகளை 4000 ரிங்கிட் (1,052 டாலர்) முதல் 18,000 ரிங்கிட் (4,736 டாலர்) விலைக்கு விற்பனைசெய்துள்ளனர்.
இந்தக் குழந்தைகள் கடத்தும் கும்பலில் 30 பேர் உள்ளனர். இப்போது 7 பேர் மட்டுமே பிடிபட்டுள்ளனர்.இவர்களிடம் இருந்து 13 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன என்றார்.
மருத்துவமனைகள், வீடுகள் என பல இடங்களை குழந்தைகளை இந்தக் கும்பல் திருடி, கடத்தி, விற்று வந்துள்ளது.இவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
போர்னியோ தீவு இந்தோனேஷியாவுக்கும் புருனேவுக்கும் சொந்தமான தீவாகும். இரு நாடுகளும் இதை பிரித்துதங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications