மிரட்டல், உருட்டலுக்கு மதிமுக பணியாது: அமைச்சர்கள்
சென்னை:
வைகோவைக் கைது செய்தால், அதைச் சந்திக்கத் தயார் என்று மதிமுக கூறியுள்ளது.
அக் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைமை அலுவலகமான தாயகத்தில் நடந்தது. அதில் புலிகளைதொடர்ந்து ஆதரிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மதிமுக மத்தியஅமைச்சர்காளான கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் கூறுகையில்,
அதிமுக ஆட்சியில் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அதை எல்லாம் திடை திருப்ப எதிர்க் கட்சிகளைஅழிக்க முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார். மதிமுகவின் விமர்சனத்தை ஜெயலலிதாவால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை.
இதனால் அடக்குமுறை அரசியலை கையில் எடுத்துள்ளார். இந்த அச்சுறுத்தல், மிரட்டலுக்கு எல்லாம் நாங்கள்பணியப் போவது இல்லை. மதிமுகவை மிரட்டி, உருட்டி பணிய வைத்துவிடலாம் என்று ஜெயலலிதா பகல் கனவுகாண்கிறார்.
எங்கள் தலைவர் வைகோ மீது எப்.ஐ.ஆர். போட்டுள்ளார்கள். இனி குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,கைது தொடர்பாக நடவடிக்கையை தொடங்க வேண்டும். அரசு என்ன செய்கிறது என்று பார்த்து எங்களதுநடவடிக்கைகள் அமையும்.
வைகோ கைது செய்யப்பட்டுவிடுவார் என்று நாங்கள் பயப்படவில்லை. மத்திய அரசிடம் போய் எங்களுக்குஉதவியும் கேட்க மாட்டோம். எங்களுக்கு வந்த சவாலை நாங்களே சந்திப்போம். இங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது பிரதமருக்கும் துணைப் பிரதமர் அத்வானிக்கும் நன்றாகவே தெரியும்.
பஸ் மறியல் செய்வது, கடை அடைக்கச் சொல்வது, அரசு சொத்துக்களை சேதப்படுத்துவது, உருவப் பொம்மைஎரிப்பது போன்ற எந்தவொரு செயலிலும் மதிமுக ஈடுபடாது. மதிமுக தொண்டர்கள் கட்டுக் கோப்புடன் இருக்கவேண்டும் என்றனர்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications