ரயில் பாலத்துக்கு தீ: கேட் கீப்பரால் பெரும் விபத்து தவிர்ப்பு- தீவிரவாதிகள் செயலா?
திருச்சி:
திருச்சியில் ரயில் பாலத்திற்கு தீவிரவாதிகள் தீ வைத்தனர். இதைப் பார்த்த ரயில்வே கேட் கீப்பர் உடனடியாகஅதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்ததால் மைசூர் எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்காமல் தப்பியது.
சமீபத்தில் தடை செய்யப்பட்ட தமிழ்நாடு விடுதலைப் படை, தமிழ் தேசிய மீட்சிப் படை ஆகிய அமைப்புகளின்தீவிரவாதிகள் தான் இதைச் செய்திருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர்.
திருச்சி- கரூர் இடையே உள்ள மலைக்கோட்டை ரயில் நிலையத்தையடுத்து குடமுருட்டி என்ற இடத்தில் அகலரயில் பாலம் உள்ளது. வாய்க்காலின் மேல் இந்தப் பாலம் அமைந்துள்ளது.
இந்தப் பாலத்தில் உள்ள ஸ்லீப்பர் கட்டைகளுக்கு இன்று அதிகாலை 3.30 மணியளவில் தீவிரவாதிகள் தீவைத்தனர். பெட்ரோல் ஊற்றப்பட்டு தீ வைக்கப்பட்டதால் அந்தக் கட்டைகளில் தீ மிக வேகமாகப் பரவியது.
சிறிது நேரத்தில் ரயில் தண்டவாளத்தைத் தாங்கி நின்ற 8க்கும் மேற்பட்ட ஸ்லீப்பர் கட்டைகள் எரிந்து சாம்பலாயின.தொடர்ந்து தீ பிற கட்டைகளுக்கும் பரவியது.
இங்கிருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ள ரயில்வே கேட் கீப்பர் பாலத்தில் தீ எரிவதைக் கண்டு திடுக்கிட்டார்.உடனே அது குறித்து திருச்சி ரயில்வே அதிகாரிகளுக்குத் தகவல் தந்தார். போலீசார், தீயணைப்புப்படையினருக்கும் தகவல் தந்தார்.
இதையடுத்து அந்தத் தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த மைசூர்- தஞ்சாவூர் எக்ஸ்பிரஸ் உடனடியாகமுத்தரசநல்லூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. தீ குறித்து தகவல் தெரிந்திருக்காவிட்டால் இந்த ரயில் விபத்தில்சிக்கியிருக்கும். ஸ்லீப்பர் கட்டைகள் எரிந்த நிலையில் தொங்கிக் கொண்டிருந்த தண்டவாளத்தில் இந்த ரயில்ஏறியிருந்தால் மிகப் பெரிய அசம்பாவிதம் நடந்திருக்கும்.
பிற ரயில்களும் அருகில் உள்ள ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். ரயில்வே உயர் அதிகாரிகளும்உடனே அங்கு வந்தனர். உடனடியாக பாலத்தை சீரமைக்கும் பணி தொடங்கியது. ஒன்றரை மணி நேரத்தில்கட்டைகளை மாற்றி பாலத்தை சரி செய்தனர்.
இதன் பின்னர் தான ரயில்கள் இந்தப் பாதையில் இயக்கப்பட்டன. இச் சம்பவத்தால் கரூர் வழியாக தென்னகத்தில்இருந்து வந்த ரயில்களும், வட பகுதியில் இருந்து தமிழகத்தின் தெற்குப் பகுதியில் சென்ற பல ரயில்களும் காலதாமதமாக சென்றன.
சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையின்பேரில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட தமிழ்நாடுவிடுதலைப் படை, தமிழ் தேசிய மீட்சிப் படையைச் சேர்ந்தவர்கள் தான் இதைச் செய்திருக்க வேண்டும் என்றுதெரிகிறது.
இந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவம் குறித்து தமிழக கியூ பிராஞ்ச் ரகசிய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கேட் கீப்பரின் செயலால் ஒரு பெரிய ரயில் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications