வைகோ கைது செய்ய பா.ஜ.க எதிர்ப்பு, காங்கிரஸ் ஆதரவு
டெல்லி:
பொடோ சட்டத்தின் கீழ் வைகோவை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என பாரதீய ஜனதா கட்சிகூறியுள்ளது.
அதே நேரத்தில் வைகோவை கைது செய்வதை காங்கிரஸ் ஆதரித்துள்ளது.
பா.ஜ.கவின் புதிய தலைவரான வெங்கைய்யா நாயுடுவும், செய்தித் தொடர்பாளருமான அருண் ஜேட்லி இருவரும்வைகோ கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
திருப்பதியில் நிருபர்களிடம் நாயுடு கூறுகையில், புலிகள் விஷயத்தில் வைகோவின் கருத்துக்களை பா.ஜ.க.ஆதரிக்கவில்லை. ஆனால், அவரைக் கைது செய்யும் தமிழக அரசின் திட்டத்தையும் ஆதரிக்க முடியாது. அவரைக்கைது செய்யக் கூடாது.
பொடோ சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவது மிகத் தவறான முடிவாகும் என்றார்.ஜேட்லி கூறுகையில், முதலில் வைகோவுடன் பேசிய பின்னர் தான் எதையும் கூற முடியும். இலங்கை விவகாரத்தில்தான் அவர் புலிகளை ஆதரித்து பேசி வருகிறார். தமிழகத்தில் அவர் புலிகளின் செயல்பாட்டை ஆதரிக்கவில்லை.இதை வைத்து அவரை கைது செய்வது சரியல்ல என்றார்.
காங்கிரஸ் ஆதரவு:
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்பால் ரெட்டி கூறுகையில்,
வைகோ குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ள கருத்துக்களை காங்கிரஸ் முழுமையாக ஆதரிக்கிறது.அவரது நடவடிக்கைகளையும் ஆதரிக்கிறோம் என்றார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications