துணை ஜனாதிபதி தேர்தலில் கடும் போட்டி நிச்சயம்
டெல்லி:
துணை ஜனாதிபதி தேர்தலில் கடும் போட்டி நிச்சயம்
அப்துல் கலாமை ஜனாதிபதி பதவிக்கு பா.ஜ.க. அறிவித்ததை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது. அவரை ஆதரிக்கவும்முன் வந்தது. அதே நேரத்தில் துணை ஜனாதிபதி பதவியை தங்களுக்கு விட்டுத் தர வேண்டும் என்று கோரியது.
ஆனால், துணை ஜனாதிபதியாக முன்னாள் ராஜஸ்தான் முதல்வரும் மூத்த பா.ஜ.க. தலைவருமான பைரோன் சிங்செகாவத் நிறுத்தப்படுவார் என துணைப் பிரதமர் அத்வானி கூறினார். இதில் யாருக்கும் விட்டுத் தர மாட்டோம் எனஅவர் அறிவித்துள்ளார்.
இதையடுத்து தங்கள் சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக அக் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஜெய்பால் ரெட்டி கூறியுள்ளார்.
துணைப் பிரதமரை அனைவரும் சேர்ந்து ஒருமித்த கருத்துடன் தேர்வு செய்ய வேண்டும் என்ற எங்கள்கோரிக்கையை அத்வானி ஏற்க மறுக்கிறார். தொடர்ந்து மோதல் போக்கில் அவர் செயல்படுவதால், அவர்களின்வேட்பாளரை ஆதரிக்க மாட்டோம். எங்கள் கட்சி தனி வேட்பாளாரை நிறுத்தும் என்று ரெட்டி கூறியுள்ளார்.
காங்கிரசுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரவு தந்தால் போட்டி நிச்சயம் மிகக் கடுமையாக இருக்கும்.
எப்படி இருந்தாலும் எங்கள் கட்சியின் வேட்பாளர் வென்று விடுவார் என பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடுகூறியுள்ளார்.
சென்னையில் லட்சுமி செகல்:
ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் ஆதரவு தந்தாலும் அப்துல் கலாமுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தரவில்லை.இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் கேப்டன் லட்சுமி செகல் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தனக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக நேற்று அவர் சென்னை வந்தார். தனக்கு அனைத்துக் கட்சியினரும் மனசாட்சிப்படிவாக்களிக்க வேண்டும் என அவர் இன்று கோரிக்கை விடுத்தார். நிருபர்களிடம் பேசிய அவர், வெற்றி தோல்விகுறித்து எனக்குக் கவலையில்லை.
உலகம் முழுவதும் அணு ஆயுதங்களை ஒழிக்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ள நிலையில் அணு குண்டுவிஞ்ஞானியான அப்துல் கலாம் அவர்களை ஜனாதிபதியாக்குவது இந்தியா குறித்து தவறான அபிப்ராயத்தைஏற்படுத்திவிடும் என்றார் செகல்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications