Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை வழக்கறிஞர் கொலை: தனி போலீஸ் படை பெங்களூர் விரைவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் நடு ரோட்டில் வழக்கறிஞர் மதனகோபால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்துவிசாரிப்பதற்காக தனிப் படை போலீசார் பெங்களூருக்கு விரைந்துள்ளனர்.

போதைப் பொருட்கள் கடத்தல் தொடர்பாக பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜரத்தினம் மற்றும்பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு மதனகோபால் ஜாமீன் எடுத்துக் கொடுக்க மறுத்து விட்டதால் தான் இந்தக் கொலைநடந்துள்ளதாகத் தெரிகிறது.

அவரை இந்த இருவரும் ஆள் வைத்துக் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்துவருகின்றனர். இதையடுத்து ராஜரத்தினம்-பாலகிருஷ்ணனின் மற்றொரு சகோதரரான செல்வராஜ் என்பரிடம்போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த சகோதரர்களின் சகோதரியான விஜயலட்சுமி என்பரை மதனகோபால் 2வது முறையாகத் திருமணம்செய்துள்ளார். இது அந்தச் சகோதரர்களுக்குப் பிடிக்காத காரணத்தினாலும் கூட இந்தக் கொலைச் சம்பவம்நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதையடுத்து சிறையிலிருக்கும் ராஜரத்தினம் மற்றும் பாலகிருஷ்ணனை விசாரிப்பதற்காக சென்னையிலிருந்துதனிப் போலீஸ் படை பெங்களூருக்கு விரைந்துள்ளது.

இந்தச் சகோதரர்களுக்கும் சென்னை-விருகம்பாக்கத்தில் உள்ள சாத்தையா என்ற போதைப் பொருள் கடத்தல்கும்பலின் தலைவனுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதைப் பற்றி போலீசாருக்கு மதனகோபால் துப்புக் கொடுத்ததால் சாத்தையா கும்பலைச் சேர்ந்த பலரைப் போலீசார்சமீபத்தில் கைது செய்தனர்.

எனவே சர்வதேச அளவில் கடத்தல் கும்பல்களுடன் தொடர்புள்ள சாத்தையா இந்தக் கொலையைச்செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக 6 தனிப் போலீஸ் படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில்விசாரணை நடந்து வருகிறது.

வெள்ளைச் சட்டை - கறுப்பு பேண்ட்டுடன் வந்த கொலையாளி:

கடந்த சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பாண்டி பஜார் பகுதியில் தன்னுடைய கார்அருகில் வைத்தே வழக்கறிஞர் மதனகோபால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

வெள்ளை நிறச் சட்டையும் கறுப்புப் பேண்ட்டும் அணிந்திருந்த மர்ம மனிதன் ஒருவன் ஒரு பைக்கில் வந்துஅவருடைய பின்னந் தலையில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு உடனே ஓடிவிட்டான்.

பின்னர் மதனகோபாலை அவருடைய மனைவி சுகுணாவும் மகள் ஆர்த்தியும் ராயப்பேட்டை அரசுமருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்தார்.

அந்தக் கொலையாளி தங்களையும் கொலை செய்யலாம் என்று சுகுணாவும் ஆர்த்தியும் போலீசாரிடம் கூறினர்.

மதனகோபால் உடல் தகனம்:

இதற்கிடையே நேற்று பிற்பகல் மதனகோபாலின் உடல் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டு பின்னர் அவருடையகுடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் நேற்று மாலை 6 மணிக்கு மதனகோபாலின் உடல் தகனம் செய்யப்பட்டது.

வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு:

இந்நிலையில் மதனகோபால் படுகொலையைக் கண்டித்து சென்னை வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றப்புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினர்.

மதனகோபாலைக் கொலை செய்தவர்களை விரைவாகப் போலீசார் பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திசென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் கறுப்பு பேட்ஜ்கள் அணிந்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் இது குறித்த மனு ஒன்றையும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டியிடம் அவர்கள்அளித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+