இளங்கோவன்- வாழப்பாடி மோதல் ஆரம்பம்
விருதுநகர்:
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் இளங்கோவனுக்கும் அக் கட்சியில் சமீபத்தில் இணைந்த வாழப்பாடிராமமூர்த்திக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது வாழப்பாடி ராமமூர்த்தி காங்கிரசில் இருந்து விலகினார். திவாரி காங்கிரஸ்கட்சியில் சேர்ந்தார். பின்னர் அந்தக் கட்சி காங்கிரசில் சேர்ந்தபோது வாழப்பாடி தனியார் தமிழக ராஜிவ் காங்கிரஸ்கட்சியை நடத்தி வந்தார்.
நீண்ட யோசனைக்குப் பின் அவரை மீண்டும் காங்கிரசில் சேர்த்தார் சோனியா காந்தி. வாழப்பாடியை காங்கிரசில்சேர்க்க முக்கிய முயற்சி எடுத்தவர் இளங்கோவன்.
இந் நிலையில் காங்கிரஸ்- த.மா.கா. இணைப்பு குறித்து வாழப்பாடி ராமமூர்த்திக்கும் இளங்கோவனுக்கும் இடையேபிரச்சனை எழுந்துள்ளது. மூப்பனாரை எப்போதும் எதிர்த்து வந்த வாழப்பாடி, இப்போது மூப்பனார் உருவாக்கியத.மா.காவை காங்கிரசில் சேர்ப்பதையும் விமர்சித்து வருகிறார்.
இதையடுத்து வாழப்பாடி ராமமூர்த்திக்கு இளங்கோவன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். விருதுநகரில்நிருபர்களிடம் பேசிய அவர், இந்த இணைப்பை வாழப்பாடி ராமமூர்த்தி கொச்சைப்படுத்தி வருகிறார். அதை அவர்நிறுத்திக் கொள்வது நல்லது. இல்லாவிட்டால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த இணைப்பைகட்சியில் உள்ள யார் விமர்சித்தாலும் தலைமை கடும் நடவடிக்கை எடுக்கும் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications