துபாய்: இந்திய ஆண்- வங்கதேச பெண்ணுக்கு சிறை
Subscribe to Oneindia Tamil
துபாய்:
துபாயில் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்த இந்தியருக்கும் வங்க தேசப் பெண்ணுக்கும் 70சாட்டையடிகள் தரப்பட்டன. இருவருக்கும் 2 மாதங்கள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
சிறை தண்டனை அனுபவித்த பின்னர் இருவரும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட உள்ளனர்.
இவர்கள் குறித்து அருகில் உள்ள வீட்டில் வசித்து வந்த துபாய்காரர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தார்.இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் திருமணம் செய்யாமல் சேர்ந்து ஒரே வீட்டில்வசித்து வருவது உறுதியானது.
இதையடுத்து அந் நாட்டின் இஸ்லாமிய நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியது.












Click it and Unblock the Notifications