ஒப்பந்த மீறல்: புலிகள் மீது கண்காணிப்புக் குழு புகார்
கொழும்பு:
இலங்கையில் தற்போது அமலில் இருக்கும் நிரந்தர போர்நிறுத்த ஒப்பந்தத்தை அரசை விட புலிகள் தான் அதிகஅளவில் மீறியுள்ளதாக போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் இன்று தெரிவித்தனர்.
விடுதலைப்புலிகள் 56 முறை ஒப்பந்தத்தை மீறியுள்ளனர் என்றும் இலங்கை அரசு 20 முறை மீறியுள்ளது என்றும்கண்காணிப்புக் குழுவினர் கூறினர்.
புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே கடந்த பிப்ரவரி 23ம் தேதி நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தம்அமலுக்கு வந்தது. இந்தப் போர்நிறுத்தத்தைக் கண்காணிப்பதற்காக ஒரு கண்காணிப்புக் குழுவும் நியமிக்கப்பட்டது.
கடந்த ஜூன் 30ம் தேதி வரை போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இந்தக் கண்காணிப்புக் குழுவுக்கு மொத்தம் 380புகார்கள் வந்துள்ளன. அவற்றில் 270 புகார்கள் புலிகளுக்கு எதிராகக் கூறப்பட்டவையாகும். இலங்கை அரசின்கட்டுப்பாட்டில் உள்ள ராணுவத்திற்கு எதிராக 110 புகார்கள் கூறப்பட்டன.
புலிகள் மீது கூறப்பட்ட புகார்களில் ஆட்களைக் கடத்துதல் தொடர்பாக 21 புகார்கள், பொதுமக்களைத்துன்புறுத்துதல் தொடர்பாக 11 புகார்கள் ஆகியவை தான் முக்கியமானவையாகும்.
ஆனால் ராணுவத்தினருக்கு எதிராக இவற்றை விடக் குறைவான புகார்கள் தான் தெரிவிக்கப்பட்டன.
இதற்கிடையே 18 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளை புலிகள் தங்கள் இயக்கத்தில் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் புகார்கள் வந்து கொண்டிருந்தன.
இது தொடர்பாக 44 புகார்கள் கண்காணிப்புக் குழுவிடம் வந்துள்ளன. ஆனால் இந்தப் புகார்கள் குறித்துதொடர்ந்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் குழந்தைகள் சேர்க்கப்படுவது குறித்து நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் எதுவும் கூறப்பட்டிருக்கவில்லைஎன்றாலும் பொதுமக்களைத் துன்புறுத்துதல் தொடர்பான பிரிவில் இதைச் சேர்த்திருப்பதாகக் கண்காணிப்புக்குழுவினர் கூறினர்.
வல்வெட்டித்துறையில் அதிக அளவாக 182 போர்நிறுத்த ஒப்பந்த மீறல்கள் நடந்துள்ளதாகவும் கண்காணிப்புக்குழுவினர் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
புகார்கள் குறித்து இன்னும் தொடர்ந்து விசாரித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ள கண்காணிப்புக் குழு,இனியாவது ஒருவருக்கொருவர் புகார்களைக் கூற முன் வராமல் போர்நிறுத்த ஒப்பந்தத்தை முழு அளவில்கடைப்பிடிக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications