வைகோ கைதானால் உடனடி போராட்டம்: மதிமுக முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மதிமுக பொதுச் செயலாளரான வைகோ கைது செய்யப்பட்டால் அதற்கு மறுநாளே தமிழகம் முழுவதும் மறியல்போராட்டங்கள் நடத்தப்படும் என்று அக்கட்சி முடிவெடுத்துள்ளது.

வைகோ கைது செய்யப்பட்டால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து மதிமுகவின் அரசியல்ஆலோசனைக் குழுக் கூட்டம் நேற்று மாலை சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமானதாயகத்தில் நடந்தது.

மதிமுக அவைத் தலைவரான எல். கணேசன் தலைமையில் சுமார் நான்கு மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில்நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜனநாயக நெறிமுறைகளைக் காலில் போட்டு மிதித்து விட்டு ஆணவத்தின் உச்சாணிக் கொம்பில் நின்று கொண்டுகடந்த 14 மாதங்களாக பாஸிச வெறியாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது அதிமுக அரசு.

மக்கள் சேவைகளை எல்லாம் விட்டுவிட்டு அரசியல் எதிரிகளைப் பழி வாங்குவதற்காக அரசு எந்திரங்களை ஏவிவருகிறார்.

இலங்கைத் தமிழர்களுக்குத் துரோகம் செய்யும் வகையிலும் அந்நாட்டில் விரைவில் ஏற்படவுள்ள அமைதிப்பேச்சுவார்த்தையைச் சீர்குலைக்கும் வகையிலும் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார் முதல்வர்ஜெயலலிதா.

எதிர்க்கட்சிகளைப் பழிவாங்குவதற்காகவே மிசா சட்டத்தையும் தடா சட்டத்தையும் மத்தியில் முந்தைய காங்கிரஸ்அரசு நிறைவேற்றியது. ஆனால் தற்போதைய வாஜ்பாய் அரசோ பாகிஸ்தான் நடவடிக்கைகளைஎதிர்கொள்வதற்காகவே பொடா சட்டத்தை நிறைவேற்றியது.

ஆனால் கையில் கிடைத்துள்ள இந்தப் பொடா சட்டத்தை தன்னுடைய பாஸிச வெறியாட்டத்துக்குப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.

இலங்கைத் தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்க வேண்டும் என்பதற்காகவே வைகோ தன்னுடைய கருத்துக்களைமக்கள் மன்றத்தில் கூறி வருகிறார். நாடாளுமன்றத்தில் கூட அவர் விடுதலைப்புலிகளை ஆதரிப்பதாகக்கூறியுள்ளார்.

தமிழக அரசு மதிமுக மீது எத்தகைய அடக்குமுறையைக் கையாண்டாலும் இலங்கைத் தமிழர்களுக்காக எங்கள்கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும்.

மதிமுக தொடங்கிய நாளிலிருந்து எந்தவிதமான வன்முறையிலும் ஈடுபட்டதில்லை. தமிழகத்திலோ இந்தியாவின்வேறு எந்தப் பகுதியிலுமோ எங்கள் கட்சி வன்முறையைத் தூண்டவில்லை. இனி வரும் காலத்திலும் வன்முறையைஆதரிக்கப் போவதில்லை.

வைகோ உள்ளிட்ட 9 மதிமுகவினர் மீது பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு வழக்குப் பதிவு செய்துள்ளதை இந்தக்கூட்டம் கடுமையாகக் கண்டனம் செய்கிறது. அரசின் இந்த அணுகுமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளகட்சிகளுக்கும் மதிமுக தன்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டால், தமிழக அரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் உள்ளமாவட்ட, வட்ட அலுவலகங்களுக்கு முன் மறியல் அறப் போராட்டம் நடத்தப்படும்.

தமிழகத்தின், தமிழக மக்களின் மொத்த நலன்களையும் படுநாசம் செய்து வரும் ஜெயலலிதா அரசை எதிர்த்துமக்கள் சக்தியைத் திரட்டும் பணியை மதிமுக முன்னெடுத்துக் செல்லும் என்று மதிமுகவின் தீர்மானங்களில்கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+