சென்னையில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை
சென்னை:
சென்னை தாம்பரம் பகுதியைக் கலக்கிய ஒரு ரவுடியை மற்றொரு ரவுடிக் கும்பல் நேற்றிரவு வெட்டிக் கொன்றது.
தாம்பரத்தில் உள்ள லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் (24) என்ற அந்த ரவுடி ஒரு கொலை வழக்கில் கடந்த1997ல் கைது செய்யப்பட்டான். கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அவன் விடுதலை செய்யப்பட்டான்.
இதே பகுதியைச் சேர்ந்த விநாயகம் என்ற ரவுடியைப் பிடிப்பதற்காக போலீசாருக்குக் கண்ணன் உதவியிருந்தார்.இதையடுத்து கண்ணனைக் கொல்வதற்குத் திட்டமிட்ட விநாயகத்தின் கூட்டாளிகள் அதற்குத் தகுந்த நேரத்தைஎதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு தன் வீட்டிலிருந்து கிளம்பிய கண்ணன், அருகிலுள்ள ஒரு டீக்கடைக்குச் சென்றார்.
இது தான் சமயம் என்று அப்போது திடீரென்று கண்ணனைச் சூழ்ந்து கொண்ட விநாயகத்தின் கூட்டாளிகள் நான்குபேர், அவனைக் கீழே தள்ளி விட்டு சராமாரியாகத் தாக்க முயற்சித்தனர்.
விபரீதத்தை உடனடியாகப் புரிந்து கொண்ட கண்ணன் கண்ணிமைக்கும் நேரத்தில் எழுந்து தன்னுடைய வீட்டுக்குஓட ஆரம்பித்தார். ஆனால் கொலை வெறிபிடித்த அந்தக் கும்பல் அவரை விடாமல் துரத்தியது.
தன் வீட்டுக்குள் ஓடி கண்ணன் ஒளிந்து கொண்ட போதிலும், அந்தக் கும்பல் வேகமாக வந்து அவனுடையவீட்டுக்குள் வைத்தே அவனை அரிவாள் உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் வெட்டிச் சாய்த்து விட்டு ஓடிவிட்டது.
பலத்த வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மிதந்த கண்ணன் உடனடியாக சென்னை மருத்துவமனையில்சேர்க்கப்பட்டான். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அங்கு கண்ணன் இறந்து விட்டான்.
இந்தக் கொலைச் சம்பவம் குறித்து தாம்பரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து செந்தில், விஜி உள்பட நான்குகொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications