மருத்துவமனையின் அலட்சியத்தால் கோமாவில் இளம் தாய்
சேலம்:
தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால் ஒரு இளம் பெண் கோமாவில் தள்ளப்பட்டுள்ளார்.இதையடுத்து அந்தப் பெண்ணின் கணவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளார்.
சேலத்தையடுத்த காரிப்பட்டியைச் சேர்ந்தவர் பெரியகவுண்டர்புரத்தைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவரதுமனைவி அங்கம்மாள் (வயது 22). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. சமீபத்தில் இவர்களுக்குஇரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது.
அப்போது தாயும் குழந்தையும் நலமுடன் இருந்தனர். ஆனால், சிறிது நேரத்தில் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன்நடந்தது. அப்போது மருத்துவர்கள் தவறான முறையில் சிகிச்சை அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அந்தப்பெண் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார். தொடர்ந்து 25 நாட்களாக அவர் கோமாவிலேயே உள்ளார்.
இது குறித்து அந்தப் பெண்ணில் கணவர் செந்தில் குமார் கலெக்டரிடம் கொடுத்துள்ள புகார் மனு விவரம்:
குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் என்னை அழைத்த டாக்டர் ராவ், பத்மா ராவ், ராஷ்மிராவ், ராஜசேகர் ஆகியோர், என் மனைவிக்கு அனஸ்தீசியா மருந்து அதிக அளவில் கொடுக்கப்பட்டுவிட்டதாகவும்இதனால் அவள் சுயநினைவுக்குத் திரும்பவில்லை என்றும் கூறினர்.
இதை ஒரு விபத்தாகக் கருதும்படி என்னிடம் கூறிய டாக்டர்கள், 48 மணி நேரத்தில் சரி செய்து என் மனைவியைசுய நினைவுக்குக் கொண்டு வந்து விடுவதாகக் கூறினர். ஆனால், 25 நாட்கள் ஆகிவிட்டன. இதுவரை அவளுக்குசுய நினைவு வரவில்லை. கோமாவில் தான் தொடர்ந்து இருக்கிறார்.
டாக்டர்களிடம் கேட்டபோது, நினைவு திரும்ப பல ஆண்டுகள் ஆகலாம், நினைவு திரும்பாமல் கூடப் போகலாம்என்று கூறிவிட்டனர்
எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளார் செந்தில் குமார்.
இது குறித்து டாக்டர் பத்மா ராவ் கூறுகையில், அங்கம்மாளின் இதயம், நுரையீரல் இயங்குகிறது. மூளைஇயங்கவில்லை. இனி அவருக்கு சுய நினைவு திரும்பாமல் போகவும் வாய்ப்புள்ளது. இதற்கு அனஸ்தீசியாதந்தபோது ஏற்பட்ட விபத்து தான் காரணம். இதற்காக மருத்துவமனை மிகவும் வருந்துகிறது என்றார்.
குழந்தையைப் பெற்றெடுத்த தாய் அந்தக் குழந்தைக்கு பால் கூட ஊட்ட முடியாமல் சுய நினைவின்றி படுக்கையில்கிடக்கிறார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications