குமாரதாஸ் நீக்கப்படுவாரா? - தமாகா இன்று முடிவு
சென்னை:
இன்று சென்னையில் கூடவுள்ள தமாகா பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏவான டாக்டர்குமாரதாஸ் கலந்து கொள்ளவில்லை என்றால் அவர் கட்சியிலிருந்து நீக்கப்படலாம் என்று தெரிகிறது.
காங்கிரசுடன் இணைவது என்று தமாகா எடுத்த முடிவை ஆரம்பத்திலிருந்தே கிள்ளியூர் எம்.எல்.ஏவான டாக்டர்குமாரதாஸ் எதிர்த்து வருகிறார். மேலும் காங்கிரசுடன் தமாகா இணைந்த பிறகு தனிக் கட்சி ஒன்றைத்தொடங்குவதற்கும் அவர் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியுடன் தமாகாவை இணைப்பதற்கான தீர்மானம் இன்று கூடவுள்ள தமாகாபொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்படவுள்ளது.
டாக்டர் குமாரதாசும் அவருடைய ஆதரவாளர்களும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டு தீர்மானத்தைஆதரிப்பார்களா என்பது குறித்து இன்று தெரிந்து விடும்.
அவர்கள் இன்றைய கூட்டத்தைப் புறக்கணித்தால் அவர்கள் அனைவரையும் கட்சியிலிருந்து நீக்குவது பற்றிபொதுக்குழு முடிவு செய்யும் என்று தெரிகிறது.
சென்னை காமராஜர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு தமாகாவின் இந்த இறுதிப் பொதுக்குழு கூடுகிறது.இக்கூட்டத்தில் 900 பொதுக்குழு உறுப்பினர்களும், 200 செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொள்கின்றனர்.
முன்னதாக காலை 9.30 மணிக்கு தமாகா தலைவர் ஜி.கே. வாசன் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் மூப்பனாரின்நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்துகின்றனர்.
காங்கிரசுடன் தமாகாவை இணைக்கும் விழா வரும் ஆகஸ்டு 14ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ளது என்பதுநினைவிருக்கலாம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications