தயாராகிறது குற்றப் பத்திரிக்கை
திருமங்கலம்:
பொடா சட்டத்தின் கீழ் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டநிலையில், அவர்கள் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யும் விஷயத்திலும் போலீசார் தீவிரமாகியுள்ளனர்.
வரும் 11ம் தேதி இரவு அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வருகிறார் வைகோ. அவர் வந்து இறங்கியவுடன் கைதுசெய்வதற்காகவே சென்னையில் தனிப் படை போலீசார் திருமங்கலத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளனர்.
வைகோவைக் கைது செய்து உடனே திருமங்கலத்திற்குக் கொண்டு செல்லவும் போலீசார் தயாராக உள்ளனர்.
அவரைக் கைது செய்த பிறகு, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள மற்ற 8 பேரும் கைது செய்யப்படுவார்கள் என்றுதெரிகிறது. அவர்களுடைய நடவடிக்கைகளை தற்போதே ரகசியப் போலீசார் தீவிரமாகக் கண்காணித்துவருகின்றனர்.
இதற்கிடையே வைகோ உள்ளிட்ட 9 பேர் மீதும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யவும் போலீசார் தீவிரமுயற்சியில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.
குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றால் அதற்கு முன் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்துவாக்குமூலத்தைப் பெற வேண்டும். எனவே இதற்கான உயர் போலீஸ் அதிகாரிகளின் உத்தரவுக்காக திருமங்கலம்போலீசார் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள மதிமுகவின் கொள்கை விளக்க அணி துணைச் செயலாளரானவக்கீல் அழகு சுந்தரத்தைத் தேடி திருப்பரங்குன்றத்தில் உள்ள அவருடைய வீட்டுக்குப் போலீசார் நேற்று மாலைசென்றனர்.
ஆனால் வீட்டில் அவர் இல்லாததைத் தொடர்ந்து அவருடைய தம்பி ஜோதியிடம் சுமார் 30 நிமிட நேரம் விசாரணைநடத்தி விட்டுச் சென்றனர் போலீசார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications