காவிரி ஆணையத்தை கூட்டுகிறார் வாஜ்பாய்: ஜெயலலிதா பங்கேற்க மறுப்பு
டெல்லி:
கர்நாடகம் காவிரியில் நீர் திறந்து விட மறுத்துவிட்டதைத் தொடர்ந்து பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான காவிரிநதி நீர் ஆணையம் விரைவில் கூடவுள்ளது.
ஆனால் காவிரி நதி நீர் ஆணையத்தின் உத்தரவின் படி கர்நாடகம் நீர் திறந்து விடவில்லை என்று புகார் கூறியுள்ளதமிழக அரசு இந்த ஆணையத்தால் எந்த விதமான பிரயோஜனமும் இல்லை என்பதால் அதன் கூட்டங்களில்கலந்து கொள்ளப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றையும் தொடர தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.
இதற்கிடையே காவிரியில் 3 டி.எம்.சி. நீரைத் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு வாஜ்பாய்உத்தரவிட்டார்.
ஆனால் பருவ மழை பெய்யாததைக் காரணம் காட்டி தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறந்து விட முடியாது என்றுவாஜ்பாய்க்கு கர்நாடக முதல்வர் கிருஷ்ணா சமீபத்தில் கடிதம் எழுதினார்.
இந்நிலையில் காவிரி நதி நீர் ஆணையம் மீண்டும் விரைவில் கூடவுள்ளது. இந்த ஆணையக் கூட்டத்தின் மூலம்தமிழகத்தைச் சமாதானப்படுத்த மத்திய அரசு முனைந்துள்ளது.
ஆனால் கேரள முதல்வர் ஆண்டனி, கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா கலந்து கொள்ளும் இந்தக் கூட்டத்தில்தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிகிறது.
காவிரி நதி நீர் ஆணையத்தைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவுசெய்திருப்பதாலும் இந்த ஆணையக் கூட்டத்தைப் புறக்கணிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகக்கூறப்படுகிறது.
ஆனாலும் ஆணையக் கூட்டத்தில் ஜெயலலிதாவையும் கலந்து கொள்ளச் செய்வதற்காக பிரதமர் வாஜ்பாய்தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications