சென்னையில் மீண்டும் தொடர் கொள்ளைகள்
சென்னை:
சென்னையில் மீண்டும் கொள்ளைச் சம்பவங்கள் தலை தூக்க ஆரம்பித்துள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னையிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் சொல்லி வைத்தாற்போல்தினந்தோறும் இரவு நேரங்களில் கொள்ளைகள் நடந்து வந்தன.
இது தொடர்பாக சில கொள்ளையர்களை மட்டும் போலீசார் கைது செய்து பணம், நகை மற்றும் பொருட்களைமீட்டனர்.
இதன் பின்னர் அவ்வப்போது கொள்ளைச் சம்பவங்கள் நடந்த போதிலும் இவை ஏதோ வழக்கமாக நடக்கும்செயல்கள் தான் என்று மக்களும் எண்ண ஆரம்பித்து விட்டார்கள் போலும்.
இந்நிலையில் கடந்த ஓரிரு நாட்களில் மீண்டும் தொடர் கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளன.
சென்னை துரைப்பாக்கத்தில் "புட் வோர்ல்டு" என்ற பிரபலமான தனியார் நிறுவனத்தின் அலுவலகம் செயல்பட்டுவருகிறது.
இன்று காலை அதன் ஊழியர்கள் அலுவலகத்தைத் திறந்து பார்த்த போது, அங்கிருந்து ரூ.1 லட்சம் வரை பணம்கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். துரைப்பாக்கம்போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே கடந்த ஓரிரு நாட்களில் சென்னையைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் ரூ.75,000 மதிப்புள்ளநகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
கொள்ளையர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications