""பதவி சுகத்தை தேடி அலையக் கூடாது"": கராத்தேவுக்கு நீதிமன்றம் மீண்டும் சூடு
டெல்லி:
மேயராகப் பதவி சுகம் பெறுவதை விட்டுவிட்டு மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச்செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று சென்னை மாநகர துணை மேயரான கராத்தே தியாகராஜனைசென்னை உயர் நீதிமன்றம் இன்று கண்டித்துள்ளது.
சென்னை மேயராக இருந்த ஸ்டாலினின் பதவி, தமிழக அரசின் சட்டத்தால் பறி போயுள்ளது. இந்த நிலையில்,ஸ்டாலின் பதவி பறிக்கப்படக் கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் உதயகுமார் என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுபாஷன் ரெட்டி மற்றும் முருகேசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்தச்சட்டத்திற்குத் தடை விதிக்க மறுத்தது. இருப்பினும் மேயர் பதவி காலியாக வைக்கப்பட வேண்டும் என்றும் இறுதித்தீர்ப்பு வரும் வரை தேர்தல் நடத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டது.
இந்த நிலையில் துணை மேயர் கராத்தே தியாகராஜன் பொறுப்பு மேயராக பதவியேற்று மேயர் இருக்கையில்அமர்ந்து மேயருக்குரிய பணிகளை செய்ய ஆரம்பித்தார்.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவை அவமதித்து விட்டதாக கராத்தே தியாகராஜன் உள்ளிட்டவர்கள் மீதுஉதயக்குமார் அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.
இவ்வழக்கு தொடர்பான விசாரணையின் போது கராத்தே தியாகராஜனை மிகவும் கண்டித்துப் பேசினார் சென்னைஉயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி. இந்த வழக்கு தொடர்பான இறுதித் தீர்ப்பு வருவதற்குள் என்னஅவசரம், அதற்குள் யார் மேயராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்கள் என்று மிகக் கடுமையாகவும்ஆவேசமாகவும் அப்போது நீதிபதி சுபாஷன் ரெட்டி கேட்டார்.
இதைத் தொடர்ந்து ஜூன் 8ம் தேதி இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிபதி சுபாஷன் ரெட்டிதெரிவித்தார்.
ஆனாலும் இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது கராத்தே தியாகராஜனைநீதிமன்றம் மீண்டும் கண்டித்தது. இன்று நீதிபதி சுபாஷன் ரெட்டியும் நீதிபதி முருகேசனும் கூறியதாவது:
மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளான குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகளைத் தான் துணைமேயர் கவனிக்க வேண்டும்.
அதை விட்டு விட்டு பதவி விலக்கப்பட்ட மேயரின் காரையோ, கொடியையோ பயன்படுத்துவதில் அந்தப்பதவியின் சுகத்தை அடைய முயற்சிக்கக் கூடாது.
நீங்கள் மேயர் பொறுப்பைத் தான் ஏற்றுக் கொண்டிருக்கிறீர்களே தவிர மேயராகி விடவில்லை. மேயர் இல்லாததால்அவருக்கான பொறுப்புக்களை மட்டுமே நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். மேயர் மேயர் தான், துணை மேயர்துணை மேயர் தான்.
மேலும் இனி மேயருக்கான வசதிகளைப் பயன்படுத்த மாட்டேன் என்று துணை மேயர் உத்தரவாதம் அளிக்கவேண்டும். அந்த உத்தரவாதத்தின் அடிப்படையில் தான் தீர்ப்பு இருக்கும் என்று நீதிபதிகள் கூறினர்.
இந்த வழக்கு மீதான விசாரணை தொடர்பாக கராத்தே தியாகராஜனின் வழக்கறிஞர் மேலும் ஒரு நாள் அவகாசம்கேட்டார்.
அதற்கு அனுமதியளித்த நீதிபதி சுபாஷன் ரெட்டியும் நீதிபதி முருகேசனும் இவ்வழக்கின் மீதான தீர்ப்பை நாளைக்குஒத்திவைத்தனர்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications