கூலித் தொழிலாளியிடம் பணம் பறித்து பொய் வழக்கு: போலீஸ்காரர் சஸ்பெண்ட்
திண்டுக்கல்:
பஸ் நிலையத்தில் புகை பிடித்துக் கொண்டிருந்த கூலித் தொழிலாளியை கைது செய்யப் போவதாக மிரட்டி ரூ. 4,000 லஞ்சம்வசூலித்த போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தமிழகத்தில் பொது இடங்களில் புகை பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து போலீசார் தமிழகம் முழுவதும் பணம்பறித்து வருகின்றனர்.
திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலையத்தைச் சேர்ந்தவர் போலீஸ்காரர் ஒருவருக்கு பஸ் நிலையத்தில் உள்ள துணை போலீஸ்நிலையத்தில் டூட்டி போடப்பட்டிருந்தது.
அங்கு கூலித் தொழிலாளியான ஒரு பெயிண்டர் சிகரெட் குடித்துக் கொண்டிருந்தார். அவரிடம் போன காவலர், அவரை கைதுசெய்வதாக மிரட்னார். இதையடுத்து ரூ. 50 அபராதம் கட்டி விடுகிறேன். என்னை விட்டுவிடுங்கள் என்று அந்தத் தொழிலாளிகெஞ்சியுள்ளார்.
ஆனால், காக்கிச் சட்டை ஆசாமி விடவில்லை. அந்தத் தொழிலாளியின் அண்டர்வேருக்குள் கையைவிட்டு அதில் இருந்த ரூ.4,000 த்தை எடுத்துக் கொண்டு விரட்டி விட்டார். அந்தப் பணம் பெயிண்ட் வாங்க வைத்திருந்ததாகக் கூறிய அந்தக் கூலித்தொழிலாளி எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் பலன் கிடைக்கவில்லை.
இதையடுத்து அவர் தனது நண்பர்களிடம் இந்தத் தகவலைத் தெரிவித்தார். அவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து தாடிக்கொம்புகாவல் நிலையத்துக்குச் சென்றனர். பொது இடத்தில் சிகரெட் குடித்தால் ரூ. 100 தானே அபராதம். எப்படி ரூ 4,000த்தைப்பறிக்கலாம் என்று அந்தக் காவலரிடம் வாதாடினர்.
பணத்தைத் தராவிட்டால் உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுக்கப் போவதாக மிரட்டினர். இதையடுத்து ரூ. 4,000த்தை செலவுசெய்துவிட்டதாகவும், இப்போதைக்கு இதை வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி தனது டிவிஎஸ்-50 மொபெட்டை அவர்களிடம்அந்தக் காவலர் தந்துள்ளார்.
பணத்தைத் தந்துவிட்டு மொபெட்டை திரும்ப மீட்டுக் கொள்வதாகக் கூறியுள்ளார்.
ஆனால், அவர்கள் சென்ற பின்னர், தனது மொபெட்டை பெயிண்டர் திருடிவிட்டதாக அதே காவல் நிலையத்தில் அந்தபோலீஸ்காரர் புகார் பதிவு செய்துள்ளார்.
இதையடுத்து காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப் பதிவு செய்து அந்தக் கூலியைப் பிடித்து விசாரித்துள்ளார்.அப்போது தான் கூலித் தொழிலாளிடம் பணத்தைப் பறித்துக் கொண்டு அவர் மீதே போலீஸ்காரர் போலியாக புகார் தந்த விவரம்தெரியவந்தது.
இதையடுத்து அந்தக் காவலர் மீது உயர் அதிகாரிகளிடம் புகார் தந்தார். இதைத் தொடர்ந்து மாவட்ட எஸ்.பி. அக் காவலரைபணியில் இருந்து இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications