வைகோவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க நீதிபதி மறுப்பு
திருமங்கலம்:
விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக பொடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள மதிமுகபொதுச் செயலாளர் தவிர அக்கட்சியைச் சேர்ந்த 8 பேருக்கும் ஜாமீனில் வெளி வர முடியாத கைது வாரண்ட்பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த உடனேயே திருமங்கலத்தில் கடந்த ஜூன் 29ம் தேதி நடந்தபொதுக்கூட்டத்தில் வைகோ பேசியது தொடர்பான ஆடியோ மற்றும் வீடியோ விவரங்களை திருமங்கலம்போலீசார் சேகரிக்கத் தொடங்கினர்.
அனைத்து ஆதாரங்களையும் சேகரித்த போலீசார் நேற்று அவற்றை திருமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில்சமர்ப்பித்தனர்.
இதையடுத்து திருமங்கலம் நீதிமன்ற நீதிபதி வெங்கடாஜலபதி வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களைச்சரிபார்த்தார்.
பின்னர் வைகோ தவிர வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள மற்ற 8 பேருக்கும் எதிராக ஜாமீனில் வெளி வர முடியாதகைது வாரண்டை நீதிபதி வெங்கடாஜலபதி பிறப்பித்தார்.
லோக்சபா சபாநாயருடன் ஆலோசனை:
வைகோவுக்கு எதிராக அவர் பிடிவாரணட் தர மறுத்துவிட்டார். மாவட்ட நீதிபதியுடன் கலந்து பேசிவிட்டுத் தான்வைகோவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க முடியும் என அவர் கூறிவிட்டார். எம்.பியாக இருப்பதால்அவரைக் கைது செய்ய லோக்சபா சபாநாயகரின் அனுமதியைப் பெற வேண்டும் என்பதால் இது குறித்து மூத்தநீதிபதிகளுடன் பேசிவிட்டுத் தான் செய்ய முடியும் என நீதிபதி வெங்கடாஜலபதி கூறியதாகத் தெரிகிறது.
மேலும் கடந்த ஆண்டு அவசர அவசரமாக திமுக தலைவர் கருணாநிதியைக் கைது செய்தது போல் தற்போதுஅவசரப்பட்டு வைகோவைக் கைது செய்ய தமிழக அரசு விரும்பவில்லை என்று மற்றொரு போலீஸ் அதிகாரிதெரிவித்தார்.
பொடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்களைக் கைது செய்வதற்கு வாரண்ட் எதுவும்தேவையில்லை என்றாலும் முன்னெச்சரிக்கையாகப் போலீசார் இந்த வாரண்ட்டை நீதிமன்றத்தில் பெற்றுள்ளனர்.
வைகோவைக் கைது செய்ய அரசு முடிவு செய்துவிட்டால் வாரண்டே இல்லாமல் கூட கைது செய்ய முடியும்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications