மதிமுகவினர் கைதுக்கு இளங்கோவன் ஆதரவு: பொடாவுக்கு எதிர்ப்பு
மதுரை:
விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் மதிமுகவினரை கைது செய்தது சரி தான் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்இளங்கோவன் கூறியுள்ளார். ஆனால், பொடா சட்டத்தின் கீழ் கைது செய்ததை ஏற்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
மதுரையில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர்,
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசி வரும் வைகோவைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பித்ததும் சரியான நடவடிக்கைதான. அவர்கள் மிக வெளிப்படையாகவே புலிகளை ஆதரித்து வருகிறார். இந்த நடவடிக்கையை மாநில அரசு முன்பேஎடுத்திருக்க வேண்டும். தாமதமாகச் செய்தாலும் சரியான நடவடிக்கையைத் தான் எடுத்துள்ளார்கள்.
ஆனால், இதற்கு பொடா சட்டத்தைப் பயன்படுத்தியதைத் தான் ஏற்க முடியவில்லை. எத்தனையோ சட்டங்கள் இருக்கும்போதுஇதை பயன்படுத்த வேண்டியதில்லை.
இந்தச் சட்டத்தை காங்கிரஸ் கட்சி ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வந்திருக்கிறது. இச் சட்டத்தை அரசியல் எதிரிகளை ஒடுக்கவும்சிறுபான்மையினருக்கு எதிராகவும் பயன்படுத்த வாய்ப்புள்ளது என்பதால் அதை எதிர்த்தோம். இப்போதும் எதிர்க்கிறோம்.
மத்திய அரசில் அமைச்சர்களாக உள்ள மதிமுகவின் இரு அமைச்சர்களும் புலிகள் விஷயத்தில் தங்கள் நிலையைத் தெளிவுபடுத்தவேண்டும். புலிகள் இயக்கம் மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. அந்த இயக்கத்தை இரு அமைச்சர்களும் ஆதரித்தால்உடனே அவர்களை அமைச்சரவையில் இருந்து பிரதமர் நீக்க வேண்டும் என்றார் இளங்கோவன்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications