இமாம் அலியின் கூட்டாளிகள் 4 பேர் கைது: பொது மக்கள் விரட்டிப் பிடித்தனர்
திருநெல்வேலி:
அல்-உம்மா தீவிரவாதி இமாம் அலியின் கூட்டாளிகள் 4 பேரை பொது மக்களும், போலீசாரும் சேர்ந்து விரட்டிப் பிடித்தனர்.
சென்னை இந்து முன்னணி அலுவலக குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட அல்-உம்மா தீவிரவாதியான இமாம் அலிமதுரை நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது திருமங்கலம் காவல் நிலையத்தில் இருந்துதப்பியோடிவிட்டான். அவனைப் பிடிக்க பல தனிப் படைகள் அமைக்கப்பட்டும் கூட எந்தப் பலனும் ஏற்படவில்லை. அவன்தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வருகிறான்.
இந் நிலையில் நேற்று திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் போலீசார் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது போலீஸ் ஜீப் வருவதைக் கண்ட 4 பேர் அங்கிருந்து ஓட ஆரம்பித்தனர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை விரட்டிச் சென்றனர். பொது மக்களும் அவர்களை விரட்டினர். நீண்ட தூரம்விரட்டிச் சென்ற பிறகு அந்த 4 பேரும் பிடிபட்டனர்.
அவர்களை பொது மக்கள் கயிறுகளால் கட்டி அடித்து உதைத்தனர். ரத்தக் காயங்களுடன் அவர்களை பொது மக்களிடம் இருந்துமீட்ட போலீசார் உடனே காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு வைத்து விசாரித்தபோது தான் இந்த நால்வரும் இமாம் அலியின் கூட்டாளிகள் என்பது தெரியவந்தது. மேலும்மேலப்பாளையம் பஸ் நிலையத்திற்கு தீ வைத்ததும் இந்தக் கும்பல் தான் என்ற விவரமும் தெரியவந்தது.
வழக்கமான ரோந்து சென்ற போலீசார் தங்களைத் தான் தேடி வருகின்றனர் என்று நினைத்து இவர்கள் தப்பியோடியுள்ளனர். இமாம்அலி எங்கே மறைந்திருக்கிறான் என்ற விவரம் இவர்களுக்குத் தெரியும் என்று கருதப்படுகிறது. இவர்களிடம் தொடர்ந்துவிசாரணை நடந்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications