சொந்த மண்ணில் கலாம்: அண்ணனைக் கட்டித் தழுவி ஆசி பெற்றார்
ராமேஸ்வரம்:
ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரான பிறகு முதல் முறையாக அணு விஞ்ஞானி "பாரத ரத்னா" டாக்டர் அப்துல்கலாம் தன்னுடைய சொந்த ஊரான ராமேஸ்வரத்துக்குச் சென்றார்.
நேற்று பிற்பகல் 2 மணிக்கு தான் பிறந்து வளர்ந்த ராமேஸ்வரத்துக்கு அவர் வந்த போது, பாம்பனிலிருந்துராமேஸ்வரம் வரையிலான பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலையின் இரு புறங்களிலும் பொதுமக்கள் திரண்டுநின்று உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
காட்டுப் பிள்ளையார் கோவிலின் அருகே பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள்உற்சாகம் கரைபுரண்டோட திரண்டு நின்று கலாமை வரவேற்றனர்.
அவர்களைக் கண்டதும் காரிலிருந்து இறங்கிய கலாம் அந்த மாணவிகளிடம் சிரித்து பேசி மகிழ்ந்தார்.அவர்களுடைய படிப்பு குறித்தும் அக்கறையுடன் விசாரித்தார்.
பின்னர் பள்ளிவாசல் தெருவில் உள்ள அவருடைய பிறந்த வீட்டுக்குச் சென்றார். அந்தத் தெருவிலும்நூற்றுக்கணக்கானவர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். அவர்கள் அணிவித்த மாலைகளையும்சால்வைகளையும் அன்புடனும் உணர்ச்சிப் பெருக்குடனும் ஏற்றுக் கொண்டார் கலாம்.
பின்னர் தன்னுடைய வீட்டுக்குள் நுழைந்ததும், கலாமை அவருடைய அண்ணன் முகம்மது முத்து மீரான்மரைக்காயர் கட்டித் தழுவிக் கொண்டார்.
அதன் பிறகு அண்ணனிடம் ஆசி பெற்ற கலாம், அங்கிருந்த தன்னுடைய உறவினர்களிடம் பேசினார். தன்னுடையமதிய உணவையும் அங்கேயே சாப்பிட்டார் கலாம்.
இதைத் தொடர்ந்து தன்னுடைய பழைய நண்பர்களை அழைத்துக் கொண்டு வெளியே சென்ற கலாம், அவர்களிடம்பேசிக் கொண்டே தான் படித்த பள்ளி உள்பட பல பகுதிகளையும் சென்று பார்த்தார்.
"வியர்வை சிந்துங்கள், வெற்றி நிச்சயம்":
முன்னதாக ராமேஸ்வரத்திற்குக் கிளம்புவதற்கு முன் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரிக்கு கலாம்சென்றிருந்தார்.
அந்தக் கல்லூரி மாணவர் ஒருவரிடம் அவர் பேசும் போது,
நாம் கனவு கண்டால் எண்ணங்கள் வரும். அந்த எண்ணங்கள் நிறைவேறினால் செயல்கள் பிறக்கும். செயல்கள்பிறந்தால் வெற்றி நிச்சயம்.
வளர்ந்து வரும் நம் நாடு வளம் பெறும் நாடாகவும் மாறும். வியர்வை சிந்தி உழைத்தால் இந்த வெற்றி நமக்குநிச்சயம் கிடைக்கும் என்று கூறினார்.
அதன் பின்னர் ஏராளமான போலீஸ் கார்கள் தன்னுடைய பாதுகாப்புக்காக வருவதைக் கண்ட கலாம், என் சொந்தஊர் மிகவும் சிறியது. இவ்வளவு கார்களுக்கு அந்த ஊரில் இடமிருக்காது. எனவே ஒரே ஒரு காரில் மட்டும்போலீசாரை அனுப்புங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொண்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications