வைகோவை மும்பையில் கைது செய்ய திட்டம்?
சென்னை:
நாளை சென்னை திரும்பும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவைக் கைது செய்ய போலீசார் தயாராகி வரும் நிலையில், தமிழகம்முழுவதும் இருந்து மதிமுக தொண்டர்கள் சென்னையில் குவிய ஆரம்பித்துள்ளனர்.
சிகாக்கோவில் இருந்து மும்பை வழியாக நாளை பகல் 1 மணிக்கு வைகோ சென்னை விமான நிலையத்துக்கு வருவார் என்று தெரிகிறது.ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விமான நிலையத்தில் குவிய உள்ளதால், அவரை மும்பையிலேயே வைத்து கைது செய்துவிட போலீசார்திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்தால் பிரச்சனை உருவாகலாம் என்பதால் அவரை மும்பையில் கைது செய்ய அரசுதிட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக ஒரு போலீஸ் படை மும்பை புறப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந் நிலையில் வைகோ கைது செய்யப்படும் நிலையில், அதை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டத்தில் குதிக்க அந்தக் கட்சியின்தொண்டர்கள் தயாராகி வருகின்றனர்.
அவருக்கு சென்னை விமான நிலையத்தில் பெரும் வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தமிழகத்தின் பல்வேறுபகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மதிமுகவினர் சென்னைக்கு புறப்பட ஆரம்பித்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் நாளை காலை சென்னையில் குவிந்துவிடுவார்கள். இதையடுத்து சென்னையில் விமான நிலையத்தில் மிக பலத்தபாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மும்பையிலோ அல்லது சென்னையிலோ கைது செய்யப்படும் வைகோ சென்னையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரைமதுரை சிறைக்குக் கொண்டு செல்லவும் வாய்புள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந் நிலையில் வைகோவின் பிறந்த ஊரான சிவகாசியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தென் மண்டல ஐ.ஜியின் நேரடிமேற்பார்வையில் சிவகாசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்தப் பிரச்சனையில் மத்திய அரசின் உதவி தேவையில்லை என வைகோ கூறிவிட்டதாகத் தெரிகிறது. தேசிய ஜனநாயகக்கூட்டணயின் ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டசிடம் தொலைபேசியில் பேசிய வைகோ, இந்த விவகாரத்தால் மத்திய அரசுக்குஎந்தவிதமான தொல்லையும் நேராமல் பார்த்துக் கொள்வேன். பிரச்சனையை நானே சமாளித்துக் கொள்வேன் என்று கூறிவிட்டதாகத்தெரிகிறது.
இந் நிலையில், வைகோ கைது செய்யப்பட்டால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என மதிமுக அறிவித்துள்ளது. சென்னைவடக்கு மாவட்ட மதிமுக செயலாளர் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் மாநில அரசுஈடுபட்டுள்ளது. இதை எதிர்த்து நாளை சென்னையில் 7 இடங்களில் தர்ணா போராட்டம் நடக்கும் என்று அறிவித்துள்ளார்.
இதே போல பல்வேறு மாவட்டத் தலைவர்களும் போராட்டம் நடத்த தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து அசம்பாவிதசம்பவங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க மாநிலம் முழுவதும் போலீசார் உஷார் நிலையில் இருக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications