போலி தங்க வியாபாரிகள்.. போலி போலீசார்... போலி போலீஸ் ஜீப்
சென்னை:
நகை வியாபாரிகள், போலீசார் போல நடித்த கும்பல் பல லட்சம் மோசடி செய்துள்ளது.
கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் ஜி.ஆர். தாஸ். இவர் நகைக் கடைகளுக்கு தங்கம் சப்ளை செய்பவர் என்று கூறிக் கொண்டு 3 நகைக்கடையினரை ஏமாற்றியுள்ளார். இந்த மோசடிக் கும்பலுக்கு இவர் தான் தலைவர் என்று தெரிகிறது.
சென்னைக்கு தங்கம் வாங்க வந்த 3 நகைக் கடைகாரர்களை இவர் சந்தித்தார். தங்கம் சப்ளை செய்பவர்களிடம் அழைத்துச்செல்வதாகக் கூறி அந்த மூவரையும் சென்னை சென்ட்ரல் அருகே உள்ள ஒரு ஹோட்டலுக்கு கொண்டு சென்றார்.
அங்கு ஒரு அறையில் தங்கியிருந்த சிலரிடம் இந்த மூவரையும் அறிமுகப்படுத்தினார். தங்கம் தரத் தயாராக இருப்பதாகக்கூறியஅவர்கள், இந்த மூவரிடமும் ரூ. 4 லட்சம் அட்வான்ஸ் கேட்டனர். இதையடுத்து மூவரும் ரூ. 4 லட்சத்தைத் தந்தனர்.
அப்போது போலீஸ் உடையில் ஒரு கும்பல் அங்கு வந்தது. முறைகேடாக தங்கம் விற்கப்படுவதாகக் கூறிய போலீசார்விற்றவர்களையும், வாங்கியவர்களையும் கைது செய்வதாக அறிவித்தனர்.
இதையடுத்து அனைவரையும் அழைத்துக் கொண்டு ஹோட்டலுக்கு வெளியே வந்தனர். அனைவரையும் போலீஸ் ஜீப்பில் ஏற்றியஅவர்கள் சிறிது தூரம் சென்றவுடன் தங்கம் விற்க இருந்தவர்களை மட்டும் கைது செய்கிறோம், நீங்கள் இறங்கிக் கொள்ளுங்கள்என்று கூறி பணம் கொடுத்த நகைக் கடையினர் 3 பேரையும் இறக்கிவிட்டனர்.
ஜீப்பில் இருந்து கீழே இறங்கிய மூவரும் எங்கள் பணம் என்னவானது என்று கேட்டுக் கொண்டிருந்தபோது அந்த ஜீப்பைக்கிளப்பிக் கொண்டு அந்தக் கும்பல் தப்பிவிட்டது.
இதன் பின்னர் தான் போலீசாராக வந்தவர்களும் பணம் வாங்கிய கும்பலின் கூட்டாளிகள் தான் என்று தெரியவந்தது. இந்தக்கும்பல் போலீஸ் ஜீப் பெயிண்ட் அடிக்கப்பட்ட ஜீப்பை பயன்படுத்தியுள்ளனர்.
இது குறித்து 3 நகை வியாபாரிகளும் ஒரிஜினல் போலீசாரிம் புகார் கொடுத்தனர். அந்த போலி போலீசாரைப் பிடிக்க தனிப் படைஅமைக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications