இந்தியா வருகிறார் காலின் பாவெல்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எல்லையில் நிலவும் பதற்றத்தைக் குறைப்பதற்காக அமெரிக்கவெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவெல் இம்மாத இறுதியில் மீண்டும் இந்நாடுகளுக்குப் பயணம்மேற்கொள்ளவுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்திய நாடாளுமன்றத்தில் தாக்குதல்நடத்தியதைத் தொடர்ந்து காஷ்மீர் எல்லையில் பதற்றம் தலை தூக்கியது.

இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எந்த நேரத்தில் வேண்டுமானாலும் போர்வெடிக்கலாம் என்ற சூழ்நிலை உருவானது.

அணு ஆயுதங்களை வைத்துள்ள இந்த இரு நாடுகளும் மோதிக் கொண்டால் பெரும் ஆபத்து ஏற்படும் என்றுகருதிய அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டுத் தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக தெற்காசியாவுக்குப் பயணம்செய்து பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அவ்வகையில் காலின் பாவெல்லும் கடந்த ஜனவரி மாதம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் வருகை தந்து, இருநாட்டுத் தலைவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதையடுத்து ஓரளவு பதற்றம் குறைந்த போதிலும் கடந்த மே 14ம் தேதி காஷ்மீரில் ஒரு பயணிகள் பஸ்சையும்ராணுவ முகாமையும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீண்டும் பயங்கரமாகத் தாக்கி 39 பேரைச் சுட்டுக் கொன்றனர்.

இதையடுத்து எல்லையில் மீண்டும் போர் மேகம் சூழ்ந்து கொண்டது. இந்த முறை இந்தியாவுக்கும்பாகிஸ்தானுக்கும் இடையே நிச்சயம் போர் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்தியாவும் எல்லைகளில் படைகளைக் குவிக்க ஆரம்பித்தது. கிழக்குக் கடற்கரையில் உள்ள போர்க் கப்பல்கள்எல்லாம் மேற்குக் கரை நோக்கி நகர்ந்து வந்து, கட்ச் வளைகுடாப் பகுதியில் பாகிஸ்தானை நோக்கி நிறுத்தப்பட்டன.

இதையடுத்து அமெரிக்க மற்றும் இங்கிலாந்து தலைவர்கள் மீண்டும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் வந்து சமரசமுயற்சிகளில் ஈடுபட்டனர்.

அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால்டு ரம்ஸ்பீல்ட் மற்றும் வெளியுறவுத்துறை இணை அமைச்சரானரிச்சர்டு ஆர்மிடேஜ் ஆகியோர் தெற்காசியாவுக்கு வந்து சென்றதும் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம்வெகுவாகக் குறைய ஆரம்பித்தது.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவெளிப்படையாகவே அந்நாட்டைக் குற்றம் சாட்டிப் பேசியது.

இதற்கிடையே இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் துணைப் பிரதமர் அத்வானிஆகியோர் எல்லையில் இன்னும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவிக் கொண்டு தான் உள்ளனர் என்றுஅடிக்கடி கூறிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் காலின் பாவெல் மீண்டும் இந்த மாத இறுதியில் தெற்காசியப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இது தொடர்பாக இந்தியாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவிடமும் பாகிஸ்தான்ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷாரப்பிடமும் கடந்த ஞாயிற்றுக்கிழமை பல மணி நேரம் தொலைபேசியில்பேசியதாக காலின் பாவெல் தெரிவித்தார்.

ஆனால் அவர் வருவதற்கான தேதி குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அநேகமாக ஜூலை 30 அல்லது31ம் தேதி காலின் பாவெல் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+