சென்னை- நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வார இறுதி நாட்களில் சென்னைக்கும், தென் மாவட்டங்களுக்கும் இடையிலான ரயில்களில் கூட்டம் அலை மோதுவதால்சென்னை- நாகர்கோவில் இடையே ஒரு சிறப்பு ரயிலை இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.
இந்த ரயில் வரும் 12ம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம்,திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக நாகர்கோவில் செல்லும்.
நாகர்கோவிலில் இருந்து 14ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு புறப்பட்டு இதே வழியில் சென்னை வந்தடையும். இந்த ரயிலில்செல்ல இன்று முதல் முன் பதிவு செய்யலாம் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
-->












Click it and Unblock the Notifications