வைகோவுக்கு எதிராகவும் பிடிவாரண்ட்: நாளை கைதாவது உறுதி
திருமங்கலம்:
பொடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளரான வைகோவுக்குஎதிராகவும் ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து நாளைஅமெரிக்காவிலிருந்து திரும்பும் அவர் கைது செய்யப்படுவது உறுதியாகிவிட்டது.
விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாகப் பொடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட 8 மதிமுகபிரமுகர்களுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது உத்தரவு நேற்று முன் தினம் இரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று காலை அவர்கள் அனைவரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பொடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள வைகோவுக்கு எதிராக மட்டும் கைதுவாரண்ட்டைப் பிறப்பிக்க நீதிபதி வெங்கடாஜலபதி மறுத்து விட்டார்.
வைகோ எம்.பியாக இருப்பதால் ஏதேனும் சட்டச் சிக்கல் வரும் என்று நினைத்து அவர் தயங்கியதாகத் தெரிகிறது.போலீசாரும் இது தொடர்பாக நீதிபதியை அவ்வளவாக வற்புறுத்தவில்லை.
இதையடுத்து போலீசார் மதுரை மாவட்ட முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தின் உதவியை நாடினர். அதே நேரத்தில்நீதிபதி வெங்கடாஜலபதியும் மதுரை நீதிமன்றத்தில் வைகோவுக்கு எதிராக வாரண்ட் பிறப்பிப்பது தொடர்பாகவிளக்கம் கேட்டார்.
வைகோவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிப்பது குறித்து நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள் என்று நீதிபதிவெங்கடாஜலபதியிடம் மதுரை மாவட்ட முதன்மை செசன்ஸ் நீதிமன்றம் கூறிவிட்டது.
இதையடுத்து வைகோவுக்கு எதிராகவும் ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்டைப் பிறப்பித்து நீதிபதிவெங்கடாஜலபதி நேற்று இரவு உத்தரவிட்டார். இந்த உத்தரவை திருமங்கலம் டி.ஜி.பியான கர்ணன் பெற்றுக்கொண்டார்.
நாளை பிற்பகல் 1 மணிக்கு அமெரிக்காவிலிருந்து வைகோ சென்னை திரும்பியவுடன் விமான நிலையத்தில்வைத்தே அவரைக் கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக திருமங்கலத்திலிருந்து தனிப் படைப்போலீசார் ஏற்கனவே சென்னையில் முகாமிட்டுள்ளனர்.
பொடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்களைக் கைது செய்வதற்கு வாரண்ட் எதுவும்தேவையில்லை. இருந்தாலும் ஒரு முன்னெச்சரிக்கைக்காகவே போலீசார் இந்தக் கைது வாரண்ட்டுகளைநீதிபதியிடம் கேட்டுப் பெற்றனர்.
வைகோ கைது செய்யப்பட்டால் அதற்கு மறுநாளே (ஜூலை 12) தமிழகம் முழுவதும் முதல்வர் ஜெயலலிதாவுக்குஎதிராக மதிமுகவினர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications