துணை ஜனாதிபதி: வேட்பாளர்களை முடிவு செய்யாத கட்சிகள்
டெல்லி:
இந்திய துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்கியது.
இப்போதுள்ள துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்தின் பதவிக் காலம் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்தப்பதவிக்கு பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வரான பைரோன் சிங் செகாவத், மேற்கு வங்கஆளுநரான தொழிலதிபர் வீரேன் ஷா, உத்தரப் பிரதேச ஆளுநர் விஷ்ணு காந்த் சாஸ்திரி ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன.
பா.ஜ.க. யாரை நிறுத்தினாலும் அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியும் ஒரு வேட்பாளரை நிறுத்த உள்ளது. காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்களான பிரணாப் முகர்ஜி, மோதிலால் வோரா, ராஜ்யசபைத் துணைத் தலைவர் நஞ்மா ஹெப்துல்லாஆகியோரின் பெயர்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.
ஆனால், இரு கட்சிகளும் வேட்பாளரை இன்னும் ஒரு முடிவு செய்யவில்லை.
இந் நிலையி துணை ஜனாபதி தேர்தலுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. வேட்பு மனுத் தாக்கலும் இன்றேதொடங்குகிறது. இம் மாதம் 24ம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.
லோக்சபாவின் செயலாளர் ஜி.பி. மல்ஹோத்ராவிடம் இந்த வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம். வேட்பு மனுவைத் தாக்கல்செய்பவரின் பெயரை 20 எம்.பிக்கள் முன்மொழிய வேண்டும்.
துணை ஜனாதிபதியை லோக்சபா, ராஜ்யசபாவைச் சேர்ந்த 790 எம்.பிக்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள்.
அடுத்த மாதம் 12ம் தேதி தேர்தல் நடக்கும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கையும்நடந்து முடிவும் அறிவிக்கப்படும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications