மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான மதிமுகவினர் கைது
தஞ்சாவூர்:
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மதிமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் வைகோவுடன் திருமங்கலம் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டு மதுரை சிறையில்அடைக்கப்பட்டுள்ள 8 மதிமுக பிரமுகர்களில் 6 பேர் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டச் செயலாளர் புலவர் செவந்தியப்பன், முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தி ஆகியோர் மட்டும் தான் இப்போது மதுரைசிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
மற்ற 6 பேரும் இன்று அதிகாலை வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். மதுரை மாவட்டச் செயலாளர் வீர இளவரசன், மதுரை நகர்மாவட்டச் செயலாளர் பூமிநாதன் ஆகியோர் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கட்சியின் துணைச் செயலாளரான அழகுசுந்தரம், தொண்டர் கணேசன் ஆகியோர் கடலூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
முன்னாள் எம்.எல்.ஏ. மணியன் மற்றும் தொண்டரான நாகராஜன் ஆகியோர் திருச்சி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
இது தவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரக்கணக்கான மதிமுகவினர் மாநிலம் முழுவதும் நேற்று இரவில் இருந்து கைதுசெய்யப்பட்டு வருகின்றனர். கோயம்புத்தூரில் மட்டும் 230 மதிமுகவினரை போலீசார் கைது செய்துள்ளனர். மாநில இளைஞரணி துணைச்செயலாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரையில் 250 மதிமுக தொண்டர்கள் இரவில் அவர்களது வீடுகளில் கைது செய்யப்பட்டனர்.
திருச்சியில் நகர் மாவட்டச் செயலாளர் மலர்மன்னன், ஊரக மாவட்டச் செயாளர் நடராஜன் உள்பட நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அதே போல தர்மபுரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் சுமார் 200 மதிமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்சியின் மாநில இணைச் செயலாளர் பழனிச்சாமி, தர்மபுரி மாவட்டச் செயலாளர் மாதேஸ்வரன், மாநில செயற்குழு உறுப்பினர்அண்ணாமலை ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலும் பலர் கைது செய்யப்பட்ள்ளனர். மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் செயலாளர் துரைசாமி, மாநிலஇளைஞணி துணைச் செயலாளர் தம்புராஜூ, ஈரோடு மாவட்ட மதிமுக மகளிர் அணித் தலைவி தமிழ்ச்செல்வி உள்ளிட்ட 150 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இது தவிர மாநிலம் முழுவதும் மேலும் பலர் பெரும் எண்ணிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications